திமுக மத்திய அமைச்சர்கள் ஆட்சியில் இருந்த பொழுது நீட் தேர்வு பற்றி பேசாத ஸ்டாலின், இப்பொழுது அரசியல் நாடகம் செய்து வருகிறார் – அமைச்சர் செல்லூர் ராஜு

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை திருமலை நாயக்கர் மஹாலிலை சுற்றியுள்ள பகுதியில் நடைபெற்று வரும் பணியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு இன்று பார்வையிட்டார். பின்பு பத்திரிக்கையாளர்களுக்கு கொடுத்த பேட்டியின் போது,மதுரை மாநகரில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. வைகையை சிரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து நெரிசல் மையம் பகுதியில் உள்ளதை தவிர்க்க இரு வழிச்சாலைகள் அமைக்க பட உள்ளது. இன்று திருமலை நாயக்கர் மகாலை சுற்றி அழகு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது. பிஜேபியின் துணைத் தலைவி வானதி சீனிவாசன் கோயம்புத்தூர் மாவட்டத்தை இரண்டாவது தலை நகரமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளார் என்ற கேள்விக்கு,மதுரை மாநகரை இரண்டாம் தலைநகரமாக ஆக்க வேண்டும் என்பதை முதலமைச்சரிடம் ஏற்கனவே கூறிவிட்டோம் ஆகையால் அதைப் பற்றி மீண்டும் நான் பேச விரும்பவில்லை.வைரஸ் தொற்றோடு வாழ பழகிக் கொள்ள தான் வேண்டும் நானே பழகி கொள்ள தயாராகிவிட்டேன். நீங்கள் கூட முக கவசம் போட்டு உள்ளீர்கள், ஆனால் நான் முக கவசம் அணியவில்லை. வைரஸ் ரோடு பழகிவிட்டேன்.எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு நாங்கள் விசுவாசமாக இருந்து வைரஸ் காலத்திலும் மக்களுக்காக பணியாற்றி சிறப்பான திட்டங்களை கொடுத்துள்ளோம்.எங்களது பணிகளைப் பார்த்து மக்கள் நிச்சயமாக தேர்தலில் எங்களை ஆதரிப்பது என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. மாநிலத்தை யார் ஆள வேண்டும் மத்தியில் யார் ஆள வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். எங்கள் பார்வை நேர் கொண்ட பார்வை .முதலமைச்சரைப் பொறுத்தவரையில் எந்த நடவடிக்கை எடுத்தாலும் சிறப்பான நடவடிக்கை எடுப்பார். புள்ளி வைத்து கோலம் போட்டு விடுவார் எங்களது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கோடு போட்டால் ரோடு போட்டு விடுவார்.திமுக மத்தியில் அமைச்சர்கள் ஆட்சியில் இருந்த பொழுது அப்பொழுதெல்லாம் நீட் தேர்வு பற்றி பேசாமல் இப்பொழுது அரசியல் நாடகம் செய்து வருகிறார் என தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..