மாவட்ட ஆட்சியர் மூடி சீல் செய்த குவாரியை வருவாய்த்துறை அமைச்சர் உதவியுடன் திறந்ததால், பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை, சமரச கூட்டத்தில் கோப்புகளை தூக்கி எறிந்த கோட்டாச்சியர்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்துள்ள கருவேலம்பட்டி பகுதியில் விவசாய நிலத்தில் அத்துமீறி திருமங்கலம் தேர்தல் பணிக்குழு தலைவர் அதிமுகவைச் சேர்ந்த கோபாலசாமி பாரி அவர்களின் கல்குவாரி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இதனால் அப்பகுதியில் விவசாயம் செய்யும் கிராம மக்களுக்கு பல ஆண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து வந்த நிலையில் கிராம மக்கள் தங்கள் நிலத்தை மீட்டு தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். மாவட்ட ஆட்சியர் குவாரிக்கு சீல் வைத்து மூடப்பட்டது.

.இந்த நிலையில் வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா ஆகியோர் உத்தரவின் பேரில் மூடப்பட்டு சீல் வைத்த குவாரியை திறந்து செயல்படத் தொடங்கியது,இதனால் ஆத்திரமடைந்த கருவேலம்பட்டி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, திருமங்கலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் கோட்டாட்சியர் சௌந்தர்யா தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அமைச்சருக்கும்,குவாரி உரிமையாளருக்கும் ஆதரவாக பேசியதால் பொதுமக்களுக்கும் அரசு அதிகாரிகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட பொதுமக்களை கோட்டாட்சியர் கோப்புகளை தூக்கி எறிந்தார். ஆத்திரமடைந்த பொதுமக்களுக்கும் காவல் துறைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. .அரசு அதிகாரிகள் அதிமுகாவிற்கு சாதகமாக நடப்பதாக கூறி கிராம மக்கள் கண்ணீர் மல்க வெளியேறினர், இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..