
சோழவந்தான் பெரிய கடைவீதியில் காமராஜர் பள்ளி அருகே முஸ்தபா மகன் உசேன் 32 பீடி சிகரெட் மற்றும் செல்போன் ரீசார்ஜ்கடை நடத்தி வருகிறார் .இரவு எப்பொழுதும் போல் உசேன் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். காலை முஸ்தபா நடைபயணம் வந்தபொழுது அவரது மகன் உசேன் கடை திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். தனது மகனுக்கு தகவல் கொடுத்தார். கடைக்கு வந்து பார்த்த பொழுது கடை இரண்டு பூட்டை உடைத்து மரக்கதவு கம்பியால் நெம்பி உள்ளே சென்று ரீசார்ஜ் பணம் சுமார் 15,000 சிகரெட் பண்டல்கள் சுமார் 20 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளதாக சோழவந்தான் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார் இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர்.
.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.