
கொரேனா ஊரடங்கு நேரத்தில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையின் செயல்கள் அனைத்தும் பெருமைக்குரியது. இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் காவல்துறையினர் தொடர்ந்து பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை தாங்களாகவே முன் வந்து செய்வதோடு மட்டுமின்றி, கொரோனா குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றனர்.அந்த வகையில், தமிழ்நாடு தீணயைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் இயக்குனர் சைலேந்திரபாபு டிஜிபி IPS, கொரோனா வைரஸ் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த ஓவியப் போட்டி ஒன்று நடத்தப்பட்டது. இந்த போட்டியில் மதுரையைச் சேர்ந்தவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். நடந்து முடிந்த விழிப்புணர்வு ஓயவிப்போட்டிக்கான பரிசளிப்பு விழா இன்று 31.07.2020 மாலை மூன்று மணி அளவில் மதுரை துணை இயக்குனர் தென் மண்டலம் தீயணைப்புதுறை அலுவலகத்தில் நடைபெற்றது.ஆன்லைன் வீடியோ காட்சி வாயிலாக நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில், தமிழ்நாடு தீணயைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் இயக்குனர் சைலேந்திரபாபு டிஜிபி அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், பெற்றோர்கள் இடத்திலும், பள்ளியிலும், சமுதாயத்திலும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கினார். இந்த கலந்துரையாடல் குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
மதுரை தென்மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, துணை இயக்குநர் பி. சரவணக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட அலுவலர் கல்யாணக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பத்து வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் பிரிவில் கே.ஆரிபா, கேந்திரா வித்யாலயா, பள்ளி மாணவி மாநில அளவில் இரண்டாம் இடத்திலும், பத்து வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில், பி.ஹம்சா குணா லியோனர் ,சேரன் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி உசிலம்பட்டி மாநில அளவில் பங்கு பெற்றமைக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கான ஏற்பாட்டினை தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் வெங்கடேசன் செய்திருந்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.