மதுரை-7வது முறையாக யாசகம் பெற்று ரூ.10,000 வழங்கிய முதியவர்

கொரோனாவால் உலகமே முடங்கி உள்ள நிலையில், பிறரிடம் யாசகம் பெற்று 7வது முறையாக மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினயிடம்  வழங்கியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த பிச்சைக்காரர் பூல்பாண்டியன் எனும் முதியவர் (வயது 65). முதன் முதலாக மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினயிடம் கடந்த 18.05.2020 அன்று கொரோனாநிவாரண நிதியாக ரூ.10,000 வழங்கியுள்ளார். இந்த முறையோடு மதுரைக்கு மட்டும் ரூ.70,000 வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 40 ஆண்டுகளாக ஊர் ஊராக பிச்சை எடுத்து வரும் பூல்பாண்டியன், தான் எடுக்கும் பிச்சை பணத்தின் பெரும் பகுதியை பல்வேறு நலத்திட்டங்களுக்கு கொடுத்துள்ளார். இதுகுறித்து பல்வேறு நாளிதழ்களில் செய்தியாக வந்துள்ளது. குறிப்பாக கன்னியாக்குமரி முதல் காஷ்மீர் வரை 400 பள்ளிகளுக்கு ஒரு பள்ளிக்கு தலா ரூ.5,000 வீதம் என பிரித்து கொடுத்து அப்பளிக்குள்ளுத் தேவையான நாற்காலி மேசசைகள், குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரம் போன்றவைகளை வாங்கிக் கொடுத்துள்ளார். அதேபோல் மும்பையில் ஒரு நாளில் 20,000 மரக்கன்றுகள் வழங்கி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.தன் வாழ்வில் பெரும் பகுதியை பிச்சை எடுத்தே வாழ்ந்து வந்துள்ள பூல்பாண்டியன், அந்த பணத்தை சுய நலமாக தனக்கே வைத்துக் கொள்ளாமல், அது ஏழை, எளிய மக்களுக்கும், இந்த சமூகத்திற்கும் பயன்பட வேண்டும் என்று பல்வேறு உதவிகள் செய்து வந்தபோதும், கொரோனா காலத்தில் ரூ.10,000 மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியது அனைவரையும் பாராட்டச் செய்துள்ளது.கொரோனாவால் அன்றாடத் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் போராடும் பொதுமக்களுக்கு இவர் போன்றோர் அளிக்கும் நிவாரணத் தொகை,அரசு சரியான நபர்களுக்குச் சென்றடையச் செய்ய வேண்டும் என்பதே அனவைரின் எதிர்பார்ப்பு. இவர் தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..