விளையாட்டு வீரர்கள் பயிற்சிக்கு அரசு அனுமதி

மாவட்ட அளவிலான விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பயிற்சி செய்வதற்கு ஏதுவாக மதுரையில் விளையாட்டு மைதானத்தை பயன்படுத்த மாவட்ட கலெக்டர் வினய் அனுமதி அளித்துள்ளார்.சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு தயாராகும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் 18 வயதுக்கு மேல் 50 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற்று வரவேண்டும். விளையாட்டு பயிற்சிகளை பாதுகாப்பான சூழலில் மேற்கொள்ளப்பட வேண்டும். அனைத்து பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பயிற்சியின்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பயிற்சி தொடங்குவதற்கு முன்பும், பின்பும் கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும். வளாகத்தின் நுழைவு வாயிலில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுவார்.விளையாட்டு வீரர்கள் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அனைத்து விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் ஆரோக்கியக் சேது செயலையை பதிவிறக்கம் செய்து கண்டிப்பாக இணைக்க வேண்டும். விளையாட்டு வீரர்கள் பயிற்சிக்கான உபகரணங்களை தாங்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். விளையாட்டு உபகரணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது. உடற்பயிற்சி கூடம் மற்றும் நீச்சல்குளம் செயல்பட அனுமதி இல்லை. பயிற்சிக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியாளர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்