விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக தயாராகும் சிலைகள். போக்குவரத்து வசதிகள் செய்து தர கோரிக்கை

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரி கிராமம் உள்ளது இங்குள்ள கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொலு பொம்மைகள், சாமி சிலைகள் தயாரித்து வருகின்றனர்.இந்நிலையில் வருகின்ற விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிறிய அளவில் இருந்து இரண்டு அடி அளவிலான விநாயகர் பொம்மைகள் தயாரித்து வருகின்றனர்.தற்பொழுது கொரானா ஊரடங்கு உத்தரவு நடைபெற்று வருகிறது. இதனால் இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுமா என்ற அச்சத்திலும் இவர்கள் உள்ளனர்.தமிழகம் மட்டுமின்றி பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகம் ஆந்திரா, மத்தியப் பிரதேசம் ஆகிய இடங்களுக்கு இங்கு தயாராகும் விநாயகர் சிலைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

சிறிய விநாயகர் சிலை 25 ரூபாய் முதல் இரண்டு அடி விநாயகர் சிலை 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.கடந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக 3 அடி ,5 அடி, 8 அடி விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டன.தற்போது கொரான ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் ஊர்வலம் செல்லும் பெரிய விநாயாகர் சிலை சமூக இடைவெளியை வேண்டி பெரிய சிலைகள் தயாரிக்கப்படவில்லை.இதனால் இவர்களுக்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.மேலும் இந்த சிலைகள் விற்பனை செய்தால்தான் தங்களுக்கு பொருளாதார நிலை உயரும் என்ற நிலையில் உள்ளனர்.தற்போது தயாரான விநாயகர் சிலைகள் வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டிய பொருட்கள் பார்சல் செய்யப்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக வீட்டிலேயே வைத்துள்ளனர்.பொது போக்குவரத்து. பார்சல் வசதி செய்ய முடியவில்லை.இதனால் இவர்களுக்கு பணம் முடக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த ஆண்டு விநாயகர் சிலை நடத்த மத்திய மாநில அரசுகள் அனுமதி அளித்து போக்குவரத்து வசதி செய்து தந்தால் தங்களுக்கு மறுவாழ்வு ஏற்படும் பொம்மைகள் தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..