சோழவந்தான் அருகே டூவீலர்கள் விபத்து-ஒருவர் பலி-இருவர் படுகாயம்

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தை அடுத்த கொசவபட்டியை சேர்ந்த சௌந்தர் மகன் அஜீத்(19).இவர் விக்கிரமத்திலிருந்து இன்று காலை டூவீலரில் ஊருக்கு சென்றுள்ளார்.வழியில் கல்புலிச்சான்பட்டியை சேர்ந்த சக்கரை(65) என்ற முதியவர் லிஃப்ட் கேட்டு அவருடன் ஏறிச் சென்றுள்ளார்.எதிரில் கல்புலிச்சான்பட்டி மோகன் (35) என்ற பால் வியாபாரி ஊரிலிருந்து விக்கிரமங்கலம் நோக்கி டூவீலரில் வந்துள்ளார்.கல்புலிச்சான்பட்டி அருகே இரு டூவீலர்களும் நேருக்கு நேர் மோதியதில் படுகாயமடைந்த முதியவர் சக்கரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.படுகாயமடைந்த மோகன் மற்றும் அஜீத் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.இது குறித்து விக்கிரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.108 ஆம்புலன்ஸ் ஒரு மணி நேரம் தாமதமாக வந்து காயமடைந்தவர்களை ஏற்றிச் சென்றது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்