Home செய்திகள் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த பழங்குடிப் பெண்ணின் கல்வி செலவு அனைத்தையும் ஏற்றார் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்

12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த பழங்குடிப் பெண்ணின் கல்வி செலவு அனைத்தையும் ஏற்றார் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்

by mohan

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தென்பரங்குன்றத்தில் வசிக்கும் G. தேவயானி என்ற மாணவி 12ம் வகுப்பில் 500/600 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். குடுகுடுப்பு குறி சொல்லும் பாரம்பரிய குடும்பத்தை சார்ந்த மாணவி தனது குடிசை வீட்டில் மின் இணைப்பு வசதி கூட இல்லாதவர்.தற்போது கல்லூரிக்கு சென்று படிக்க ஆசைப்படும் மாணவிக்கு கல்வி செலவும், சமூக சான்றிதழ் போன்ற பிரச்சனைகளும் இருந்து வந்துள்ளது. மாணவியின் நிலைமையை அறிந்த திருப்பரங்குன்றம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.பா.சரவணன் மாணவியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் மாணவியின் பள்ளி தலைமை ஆசிரியை தொடர்புகொண்டு மாணவியின் அனைத்து கல்வி செலவையும் தானே ஏற்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து, மாணவியிடம் பேசிய டாக்டர்.சரவணன் அவர்கள் “நீ வாழ்க்கையில் பெரிய இடத்தை அடைய வேண்டும்.. உன்னை போன்ற உனது சமூக மாணவர்களுக்கும் நீ உதவ வேண்டும்” என்று தெரிவித்தார்.மேலும் தற்போது மாணவிக்கு நிதியுதவி வழங்கிய டாக்டர்.சரவணன் மாணவின் வீடு இருக்கும் பகுதியில் 60க்கும் மேற்பட்ட பழங்குடி குடும்பத்தினர் வசிப்பதாகவும் அவர்களுக்கு மின் இணைப்பு வழங்க மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசியதாகவும் தெரிவித்தார்.மாணவியின் முழு கல்வி செலவையும் ஏற்ற தி.மு.க MLAடாக்டர்.பா.சரவணன்  மாணவியின் குடும்பத்தினர் நன்றியை தெரிவித்தனர்.

செய்தியாளர். வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!