
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகாவில் ஊரடங்கையும் பொருட்படுத்தாமல் கடனை வசூலிக்கும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தோழர்.மல்லிகா தலைமையில் ஜீலை 24 அன்று பெரும் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக இருந்தது.அதனையொட்டி மாவட்ட காவல்துணை கண்காணிப்பாளர் மற்றும் மகளிர் காவல் நிலையத்திலிருந்து காவல் ஆய்வாளர் ஆகியோர் முன்னிலையில் பேச்சவார்த்தை நடைபெற்றது.மைக்ரோ பைனான்ஸ் பொறுப்பாளர்களிடம் ஊரடங்கு முடியும் வரை கடனை கேட்டு நெருக்கடி கொடுக்க கூடாது என்று எழுதி வாங்கப்பட்டது. இதில் சுந்தரி,வசந்தி மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களுடன் தோழர்கள் குணசீலன்,மாரியப்பன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.