
மதுரை மாநகர புதிய காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா , மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையராக பொறுப்பேற்றார்.பின் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மதுரை மாநகரில்,சட்டம் ஒழுங்கு நிலை நிறுத்தப்படும், கொரோனா காலத்தில் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மக்கள் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா தெரிவித்தார். பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.போலீசாரின் பணியை போலீசார் தான் செய்ய வேண்டும். போலீஸ் நண்பர்கள் குழு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். சைபர் குற்றங்களை தடுக்க முயற்சி மேற்கொள்ளப்படும். இவ்வாறு கமிஷனர் தெரிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.