சீரமைக்காத கிருதுமால் நதி கால்வாயை விவசாயிகளே சீரமைத்தனர்.

திருப்பரங்குன்றம் அருகே சிந்தாமணி பகுதியில் நேற்று பெய்த கனமழையால் சுமார் 500 ஏக்கர் விளை நிலத்தில் நெற்பயிர் அறுவடைக்கு தயாரான நிலையில் கால்வாய்நீர் புகுந்ததில் முற்றிலும் நாசமடைந்தது.கால்வாய் சீரமைக்காத கிருதுமால் நதி கால்வாயை விவசாயிகளே சீரமைத்தனர்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சிந்தாமணி கிராமம் உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.இங்கு உள்ள தூளிபத்தி கண்மாய் மூலம் விவசாயம் நடைபெற்று வருகிறது.நேற்று பெய்த கன மழையில் சிந்தாமணிக்கு நீர்வரத்து உள்ள கிருதுமால் நதியிலிருந்து தாழ்வான பகுதியான விவசாய நிலம் நோக்கி கால்வாய் நீர் உள்ளே புகுந்தது .

இதில் சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் நெல் பயிர் விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள இடங்களில் நீர் புகுந்ததால் முற்றிலும் சேதமடைந்துள்ளது.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் கிருதுமால் நதி வாய்கால் நீர் விளை நிலங்களில் புகுந்ததால் அறுவடைக்கு தயரான நெற்பயிர் முழுவதும் சேமடைந்துள்ளது. இதனால் இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.இது குறித்து மாநகராட்சி அதிகரிகளிடம் கூறினால் , பொது பணித் துறை அதிகாரிகளிடம் கூற சொல்லி இரண்டு தரப்பினரும் மாறி மாறி விவசாயிகளை அலைக்கழிக்கின்றனர்.

பல்வேறு முறை எடுத்துக் கூறியும் கிருதுமால் நதியை தூர்வார பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டினை கூறுகின்றனர். மேலும் அறுவடைக்கு தயாரான நிலையில் கால்வாய் நீர் புகுந்ததால் விளைந்த நெற் Uயிர் மொத்தமும் பெரும் நாசம் அடைந்து உள்ளது. கொரான காலத்தில் விவசாயத்திற்கு ஆள் கிடைக்காமல் கஷ்டப்பட்டு விவசாயம் செய்த தங்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளதால் .அரசு உரிய நடவடிக்கை எடுத்து இழப்பீடு வழங்க வேண்டும் என கூறியுள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்