Home செய்திகள் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி மாணவியிடம் பணம் மற்றும் நகைகளை வாங்கிய வாலிபர் கைது..

இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி மாணவியிடம் பணம் மற்றும் நகைகளை வாங்கிய வாலிபர் கைது..

by mohan

மதுரை மாநகரில் வசித்து வரும் கல்லூரி மாணவி ஒருவர் கடந்த 2 வருடங்களாக இன்ஸ்டாகிராம் மூலமாக மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரை காதலித்து வந்ததாகவும் விக்னேஷ் மாணவிடமிருந்து நகைகளையும், பணத்தையும் வாங்கியதாகவும் மீண்டும் நகை மற்றும் பணத்தை திரும்ப கேட்டபொழுது பணம் நகைகளை தரமுடியாது என்றும் மாணவியுன் வீட்டிற்கு சென்று அநாகரிகமான வார்த்தைகளை பேசி மிரட்டியதாகவும் மாணவியின் பெற்றோர் தெப்பக்குளம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை பெற்று காவல் உதவி ஆய்வாளர் திரு. சிவராமகிருஷ்ணன் அவர்கள் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்து நேற்று அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினார்..

சமூக வலைதளங்களை பயன்படுத்தும் ஆண்களும் பெண்களும் தவிர்க்க வேண்டியவை: .

*உங்கள் பெயர், நிறுவனத்தின் முகவரி / வீட்டின் முகவரி, தொலைபேசி எண்கள், வயது, பாலினம், கிரெடிட் கார்டு விவரங்கள் போன்ற எந்தவொரு தனிப்பட்ட தகவலையும் பதிவிட வேண்டாம்.

*அறிமுகம் இல்லாத ஐந்தாயிரம் நண்பர்கள் எப்படி உங்களுக்கு உண்மையான நண்பர்களாக இருக்க முடியும்? அந்த நண்பர்களில் நிறைய போலிகள் இருக்கலாம். எல்லோரையும் உண்மையானவர்கள் என்று நம்பும் அந்த தருணத்தில் தான் பிரச்சினைகளும் ஆரம்பமாகின்றன.

*அறிமுகம் இல்லாத நபர்களை FACEBOOK நண்பர்களாக சேர்க்காதீர்கள்.

*உங்களுக்கு அறிமுகம் இல்லாத நபரிடம் வெப்கேமை பயன்படுத்தாதீர்கள்.

* ஒரு சமூக வலைதளத்தை தேர்ந்தெடுக்கும் போது உங்களின் தனியுரிமை சிக்கல்களை கருத்தில் கொண்டு உங்கள் பதிவுகளை இடுவது, சாட் செய்வது, பதிவேற்றம் அல்லது பதிவிறக்கம் செய்வதை தொடருங்கள்.

*சமூக வலைதளங்களில் உங்களுக்கு வரும் லிங்குகளை க்ளிக் செய்ய வேண்டாம். அந்த வலைதளங்களை நீங்கள் பார்க்க விரும்பினால் உண்மையான வலைதளங்களுக்கு நேரடியாக செல்லுங்கள்.

* உங்களின் பதிவுகள் / வீடியோக்கள் / செயல்கள் போன்றவற்றை அந்நியர்கள் பகிரமுடியும். இதற்கு உங்கள் தனியுரிமை அமைப்புகளில் உள்ள “ஒன்லி மீ” என்ற தேர்வை பயன்படுத்தவேண்டும்.

*இதன்மூலம் அந்நியர்களிடம் இருந்து உங்கள் தனிப்பட்ட / தொழில்முறை தகவல்கள் வெளியே செல்வதை நீங்கள் கட்டுப்படுத்தலாம். மேலும் நீங்கள் ஆன்லைனில் எவ்வளவு நேரம் இருக்கிறீர்கள் என்பதையும் யாரும் அறியாமல் தடுக்கலாம்.

வீடு வேறு, வெளி உலகம் வேறு வீட்டில் சில குறைகள் இருக்கலாம். வெளியே இருக்கும் பூங்காவை பார்க்க பசுமையாக அழகாகத்தான் இருக்கும். அது உங்கள் வாழ்விடம் ஆகாது. அதுபோல் நம் வீட்டு உறவுகள் போல் உண்மையாக வெளி தொடர்பு உறவுகள் இருக்க மாட்டார்கள். அதை உண்மை என்று நம்பிவிடாதீர்கள். இந்த இரண்டுக்கும் இடையில் உள்ள மெல்லிய கோட்டை உணர்ந்து கொண்டால் நம் எல்லைக்கோட்டை மீறாமல் நம்மை நாமே தற்காத்துக்கொண்டு பாதுகாப்பாக இருக்கலாம்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!