Home செய்திகள் காற்றில் பறந்த சமூக இடைவெளி

காற்றில் பறந்த சமூக இடைவெளி

by mohan

மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 60 நாட்களுக்கு மேல் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது.இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி முதல் அனைத்து பேருந்துகளும் 50 சதவீத பயணிகள் உடன் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.இதன் அடிப்படையில் உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இதற்காக போக்குவரத்து துறை அனுமதி உடன் இருக்கைகளில் அமர தடை என்று வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.இருந்த போதிலும் சுமார் 110 சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்கி வருகிறார்கள். காலை திருமங்கலம்- ஆரப்பாளையம் செல்லும் அரசு பேருந்தில் (எண்TN58N2503) அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி அனைத்து இருக்கைகளையும் முழுவதாக நிரப்பி, பயணிகளை நிற்க வைத்தும் பயணம் செல்வதை அதில் பயணம் செய்த ஒருவர் இணையத்தில் தற்போது பதிவிட்டு உள்ளார்.நோய் தொற்று பரவும் அபாயம் உள்ள இந்த நேரத்தில் குறிப்பாக வயதானவர்கள் அதிகம் அளவில் செல்லும் பேருந்தில் இப்படியான பயணம் ஆபத்தானது. அரசு போக்குவரத்து கழகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமா என கேள்வியும் எழுப்பி உள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!