Home செய்திகள் கொரோனா கால நிவாரண பொருட்களை ரேசன் கடைகள் மூலம் வழங்குவதில் அனைத்து வகையிலும் மிகப்பெரும் முறைகேடுகள் நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் குற்றச்சாட்டு….,,,,

கொரோனா கால நிவாரண பொருட்களை ரேசன் கடைகள் மூலம் வழங்குவதில் அனைத்து வகையிலும் மிகப்பெரும் முறைகேடுகள் நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் குற்றச்சாட்டு….,,,,

by mohan

கொரோனா கால நிவாரண பொருட்களை ரேசன் கடைகள் மூலம் வழங்குவதில் அனைத்து வகையிலும் மிகப்பெரும் முறைகேடுகள் நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் குற்றச்சாட்டு….,,,, ஆய்விற்கு பின் உறுதிப்படுத்தபட்டுள்ள நிலையில் ஓர் கடை ஊழலை தடுக்க தேவைப்பட்டால் நீதிமன்றத்தையும் நாட உள்ளதாகவும் பேட்டி…. நியாயவிலைக்கடைகளில் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் நடைபெறும் ஊழலை தடுக்க கோரி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் மாவட்ட ஆட்சியர் வினய்யிடம் புகார் மனு அளித்தார். அதனை தொடர்ந்து பேட்டியளித்த அவர்… மதுரை மாவட்டத்தில் 12 ரேஷன் கடைகளில் மாவட்ட வருவாய் அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டதில் கொரோனா கால நிவாரண பொருட்களை மக்களுக்கு ரேசன் கடைகள் மூலம் வழங்குவதில் அனைத்து வகையிலும் மிகப்பெரும் முறைகேடுகள் நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.லே கடைகளில் உள்ள மின்னணு இயந்திரத்தில் உள்ள பொருள் இருப்பு விவரமும் பதிவேட்டில் உள்ள இருப்பு விவரமும் முரண்பாடாக உள்ளது.

90 விழுக்காடு மக்களுக்கு 10கிலோ அளவு அரசி வழங்கிவிட்டு 20 கிலோ அரசி வழங்கியுள்ளதாக குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது.குறுஞ்செய்தி அனுப்புவதிலிருந்து ஊழல் துவங்குகிறது.ரேஷன் கடை ஊழல் தொடர்பாக தேவைப்பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்றார். இது தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொள் வேண்டுமென தெரிவித்தார். ரேஷன் பொருட்கள் விநியோகத்தை ஆய்வு செய்ய வட்டாட்சியர் தலைமையிலான 3 வருவாய் ஆய்வாளர் நியமிக்க வேண்டும். ரேஷன் அரிசியில் கருப்பு அரிசி கலப்படம் செய்ய பல நூறு மூட்டைகள் தயார் நிலையில் உள்ளதாக தகவல் வருகிறது ஒரு மூட்டை கருப்பு அரிசி கூட ரேஷன் கடைகளுக்கு வரக்கூடாது என்பதை ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது என்றார்.

மதுரை மாவட்டத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் 12 முதல் 14 ஆயிரம் பேர் வரை உள்ள நிலையில் இதுவரை 200 பேர் மட்டுமே சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் வெளி மாநில. தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் பணியினை விரைவுப்படுத்த வேண்டும்.

15வது நிதிக்குழுவிலிருந்து மதுரை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களுக்கு சுமார் 48 கோடி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எந்தெந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்பதை தேர்வு செய்து ஆன்லைனில் நாளையே பதிவேற்றம் செய்ய வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஏற்கனவே ஊராட்சி பணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் உடனடியாக இது நிறுத்தப்பட வேண்டும் என்றார்.

முறையாக பணிகள் தேர்வு செய்யப்பட்ட பின்னர்தான் ஆன்லைனில் பணிகள் குறித்த பதிவேற்றம் செய்யப்பட்ட வேண்டும்.உடனடியாக பணிகள் குறித்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்ற உத்தரவு யார் பிறப்பித்திருந்தாலும் அவை மிகப்பெரும் ஊழலுக்கும் முறைக்கேட்டிற்கும் வழிவகுக்கும் எனவும் தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்a

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!