Home செய்திகள் மதுரையில் அஜினோமோட்டோவின் உணவுமுறை மற்றும் ஊட்டச்சத்து பலன்கள் குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு

மதுரையில் அஜினோமோட்டோவின் உணவுமுறை மற்றும் ஊட்டச்சத்து பலன்கள் குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு

by mohan

மதுரையில் அஜினோமோட்டோவின் உணவுமுறை மற்றும் ஊட்டச்சத்து பலன்கள் குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அஜினோமோட்டோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அட் சிஷி மிஷுகு பேசுகையில், அஜினோமோட்டோ கரும்புச்சாறு, சோளம், மரவள்ளிக் கிழங்கு போன்ற இயற்கை தாவர பொருட்களில் இருந்து பெறப்படுகிறது நாங்கள் இயங்கி வருகின்ற வெவ்வேறு பூகோள பகுதிகளிலிருந்து எம்.எஸ்.ஜியை தயாரிப்பதற்காக அந்தந்த இடங்களில் மிக அதிகமாக கிடைக்கின்ற தாவரப் பொருட்களை நாங்கள் பயன்படுத்துகிறோம். வர்த்தக ரீதியில் எம்.எஸ்.ஜியை தயாரித்த உலகின் முதல் நிறுவனம் என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் என்று குறிப்பிட்டார். அஜினோமோட்டோ இந்தியா நிறுவனத்தின் மேலாளர் கோவிந்த பிஸ்வாஸ் பேசுகையில், உணவின் அற்புதமான சுவையை அஜினமோட்டோ இன்னும் அதிகரிக்கிறது. கரும்பு மற்றும் மரவள்ளிக் கிழங்கு போன்ற நேர்த்தியான தரம் வாய்ந்த தாவர பயிர்களில் இருந்து மதிப்பு செயல்முறை வழியாக இது தயாரிக்கப்படுகிறது. அஜினோமோட்டோ குறித்த நிலவுகின்ற தவறான கண்ணோட்டத்தை உரிய விளக்கம் அளித்து நாங்கள் வெற்றிகரமாக எதிர்கொண்டு வந்திருக்கிறோம் என்று கூறினார். பிரபல உணவு முறை ஆலோசகர் டாக்டர் தாரணி கிருஷ்ணன் பேசுகையில், மோனோசோடியம் குளுட்டோமேட் என்பது மனிதர்கள் உட்கொள்வதற்கு மிகவும் பாதுகாப்பானது. குளூட்டாமேட் அமிலம் என்பது அது மிகவும் பாதுகாப்பானது. மோனோசோடியம் குளுட்டோமேட் இயற்கை தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார்.

கீழை நியூஸுக்காக மதுரை கனகராஜ்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!