மந்தித்தோப்பு சாலையை விரிவாக்கம் செய்ய கோரி கோவில்பட்டியில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்..

கோவில்பட்டியில் இருந்து மந்தித்தோப்பு செல்லும் சாலையை சீரமைக்க கோரிய மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.

கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் மங்கள விநாயகர் கோயில் திருப்பம் முதல் மந்தித்தோப்பு வரையிலான சாலை குறுகலாக உள்ளது. இந்த சாலையில் 5 திருமண்டபங்கள் உள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். குறுகலான சாலை என்பதால் போக்குவரத்து நெருக்கடியும், அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன. இதனை தவிர்க்க மந்தித்தோப்பு சாலையை சீரமைத்து விரிவாக்க செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது. 29-வது வார்டு குடியிருப்போர் நலச்சங்க தலைவர் முத்துகண்ணன் தலைமை வகித்தார். புனித ஓம் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் லெட்சுமணப்பெருமாள் துவக்கி வைத்தார்.

இதில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர் ஜோதிபாசு, நகரக்குழு உறுப்பினர்கள் சக்திவேல்முருகன், முருகன், அந்தோணி செல்வம், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் உமா சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.