Home செய்திகள் மணல் கொள்ளையை தடுத்தபோது பலியானவர் குடும்பத்திற்கு மக்கள் நிதியளிப்பு

மணல் கொள்ளையை தடுத்தபோது பலியானவர் குடும்பத்திற்கு மக்கள் நிதியளிப்பு

by mohan

இராமநாதபுரம் அருகே இளமனூர் ஊராட்சி முன்னாள் துணை தலைவர் மோகன். இளமனூர் கண்மாயில் ஜூன் 2ல் நடந்த மணல் கொள்ளையை தடுக்க முயன்ற மோகன், ஐந்து பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இதில் பலியான மோகன் குடும்பத்திற்கு அவரது உறவினர்கள் அரசு நிவாரணம் கோரி வந்தனர். அரசு தரப்பில் எவ்வித பதில் கிடைக்கவில்லை. இதனையடுத்து, மோகன் குடும்பத்திற்கு பாதுகாப்பு நிதி வழங்க தமிழ்நாடு அகமுடையார் பாதுகாப்பு பேரவை சார்பில் முடிவெடுக்கப்பட்டது. இதன்படி இளமனூர் கிராமத்தில் 138 பேர் பங்களிப்பு நிதியுடன் அகமுடையார் பாதுகாப்பு பேரவை சார்பில் ரூ.1.55 லட்சம் நிதி திரட்டப்பட்டது. இந்நிதி மோகன் மனைவி, அவரது பெண் குழந்தைகள் பெயரில் நிரந்தர வைப்பு தொகை பத்திரமாக இன்று வழங்கப்பட்டது. இளமனூரில் இன்று நடந்த குடும்ப பாதுகாப்பு நிதி வழங்கும் விழாவில், என்.ராமசுப்ரமணியன் (தமிழ்நாடு அகமுடையார் பாதுகாப்பு பேரவை), வழக்கறிஞர் பி.யோகநாதன் (தமிழ் அகம்), சோ.பாலமுருகன் (அகமுடையார் அரண்), கே.சங்கிலி (தமிழ்நாடு அகமுடையார் மக்கள் மகா சபை) , ஆர். ரத்தினக்குமார் (இந்து ராஜகுல அகமுடையார் அறக்கட்டளை), செ.மருதுபாண்டியன் ( மருது மக்கள் இயக்கம்), எம்.சுப்புராம் (மாமன்னர் மருதுபாண்டியர் பேரவை), இளமனூர் கிராமத்தலைவர் ரங்கதாஸ் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!