Home செய்திகள் மக்களை தேடிச் சென்று மகத்தான பணியாற்றும் சாமானிய மக்களின் அரசு; பொதுமக்கள் புகழாரம்.

மக்களை தேடிச் சென்று மகத்தான பணியாற்றும் சாமானிய மக்களின் அரசு; பொதுமக்கள் புகழாரம்.

by mohan

மக்களை தேடிச் சென்று மகத்தான பணியாற்றும் சாமானிய மக்களின் அரசு என தமிழ்நாடு அரசையும், தமிழக முதலமைச்சரையும் பொதுமக்கள் பாராட்டி நன்றி தெரிவித்து வருகின்றனர். செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது-குறள் 101 (செய்நன்றி அறிதல்) வாராது வந்த மாமணி (என்பது போல், செய்யாமற் செய்த உதவி) என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும் பூமியும் கூட ஈடாக மாட்டா என்னும் வள்ளுவனின் வாக்கிற்கிணங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கான உதவிகள் விரைவில் எளிய முறையில் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் 18.12.2023 அன்று கோயம்புத்துார் மாவட்டம், ஆவாரம்பாளையத்தில், அரசுத் துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்று சேரும் வகையிலும், நிர்வாகத்தின் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும், திராவிட மாடல் ஆட்சியின் மற்றுமொரு மைல் கல்லாக மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருவதுடன், பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணவும், அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்திடவும், “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்”, “கள ஆய்வில் முதலமைச்சர் போன்ற திட்டங்களையும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், பெண்களுக்கான விடியல் பயணத் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம். இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், இன்னுயிர் காப்போம்- நம்மை காக்கும் 48 போன்ற முன்னோடி திட்டங்களையும் அரசு அறிவித்து சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

மக்களுடன் முதல்வர் என்ற இப்புதிய திட்டத்தின் கீழ், பொதுமக்கள் அதிகமாக அணுகும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் மேம்பாட்டுக் கழகம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, எரிசக்தி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை ஆகிய 13 அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெற்று தீர்வு காண்பதற்கு முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில், அனைத்து நகர்ப்புற, மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில், அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

தென்காசி மாவட்டத்தில் முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, “மக்களுடன் முதல்வர் முகாமினை மாவட்ட ஆட்சியர் துரை. இரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, எரிசக்தி துறை, தொழிலாளர் நலன் மற்றம் திறன் மேம்பாட்டுத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை ஆகிய 13 அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெற்று தீர்வு காண்பதற்கு முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில், அனைத்து நகர்ப்புற, மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில், அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. தென்காசி மாவட்டத்தில் முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, “மக்களுடன் முதல்வர் முகாமினை மாவட்ட ஆட்சியர் துரை. இரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சரின் முன்னெடுப்பின் நீட்சியாக அன்றாடம் அரசு துறைகளை அணுகும் பொதுமக்களுக்கு அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைபடுத்தி அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும், சென்று சேரும் வண்ணம் மற்றுமொரு மைல்கல்லாக புதிய திட்டம் முதல்வரின் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மக்களுடன் முதல்வர் முகவரி என்ற துறையால்”மக்களுடன் முதல்வர்”என்ற இத்திட்டம் அன்றாடம் பொதுமக்கள் அதிகமாக அணுகும் 13 அரசு துறைகள் சார்ந்த கோரிக்கைகள் அடையாளம் காணப்பட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி, தென்காசி மாவட்டத்தில் 6 நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளில் 22.12.2023 அன்று நடைபெற்ற முகாமில் 1223 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

மக்களுடன் முதல்வர் திட்டம் குறித்து பயனாளிகள் தெரிவித்ததாவது, மகேந்திரன், இராயகிரி: என் பெயர் மகேந்திரன், எனது தந்தை பெயர் சிவபாக்ய நாடார். நான் இராயகிரியில் வடக்கு ரைஸ்மில் தெருவில் வசித்து வருகிறேன். என்னுடைய பட்டா தனியாக உள்ளதால் கூட்டுப்பட்டா சேர்வதற்கு மக்களுடன் முதல்வர் முகாமில் விண்ணப்பம் அளித்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுத்து கூட்டுப்பட்டாவினை வழங்குவதற்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். என் போன்ற சாமானிய மக்களுக்கு இது போன்ற முகாம் ஒரு வரமாகக் கருதுகிறேன். இத்திட்டத்தினை செயல்படுத்திய முதல்வருக்கு மிக்க நன்றி.

நீலாவதி,இராயகிரி: என் பெயர் நீலாவதி. என்னுடைய கணவர் பெயர் கோவிந்தன். என்னுடைய கணவர் இறந்து விட்டார். எனக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கிறார்கள். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. நான் இராயகிரியில் ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வருகிறேன். எனக்கு விதவை உதவித் தொகைக்காக மக்களுடன் முதல்வர் முகாமில் விண்ணப்பித்துள்ளேன். இவ்வுதவித்தொகை கிடைத்தால் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும். இது போன்ற திட்டம் என்னைப் போல உள்ள ஏழை மக்கள் அனைவருக்கும் மிகவும் உதவியாக உள்ளது. இத்திட்டத்தினை எங்களுக்கு உதவி செய்வதற்காக செயல்படுத்திய முதல்வருக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களுடன் முதல்வர் திட்டம் உண்மையாகவே மக்களின் தேவைகளை அறிந்து அவர்களது சிரமங்களை போக்கும் சீரிய திட்டமாக திகழ்கிறது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com