மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று கோவையில் துவக்கி வைத்தார். இதை தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகரில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமை காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம் எல்எ, முருகேசன் எம் எல் ஏ ஆகியோர் முன்னிலையில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டார். கலெக்டர் பேசுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளில் இன்று (டிச.18) 2024 ஜன 6வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் வருவாய், பேரிடர் மேலாண், எரிசக்தி, மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், காவல், மாற்றுத்திறனாளிகள் நலம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, சமூக நலம், மகளிர் உரிமை, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம், கூட்டுறவு உள்பட 10-க்கும் மேற்பட்ட அரசு துறை அலுவலர்கள் பங்கேற்று மனுக்கள் பெறுவர். பொதுமக்கள் நேரடியாக கோரிக்கை மனுக்கள் வழங்கவேண்டும்.மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் பொதுமக்கள், தொழில்முனைவோர் கலந்து கொண்டு புதிய மின் இணைப்பு, மின் வீதப்பட்டியல் மாற்றம், பெயர்மாற்றம், மின்பளு மாற்றம், குடிநீர்- கழிவுநீர் இணைப்புகள், சொத்துவரி பெயர்மாற்றம், பிறப்பு-இறப்பு சான்றிதழ், திடக்கழிவு மேலாண்மை, பட்டா மாறுதல், உட்பிரிவு நில அளவை, இலவச வீட்டு மனைப்பட்டா, வாரிசு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்பட அரசு சார்ந்த சேவைகளுக்கு மனுக்கள் பெறப்படும்.இம்மனுக்களுக்கு ஒரு வார காலத்திலிருந்து 15 தினங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களிடமிருந்து பெறக்கூடிய மனுவை சிறப்பு கவனம் எடுத்து அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்வர்.நகராட்சி, பேரூராட்சிகளில் முகாம் நடைபெறும் இடம் மற்றும் வார்டுகள் குறித்து மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். பொதுமக்கள் முழு அளவில் கலந்து கொண்டு உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி பயன்பெற வேண்டுமென கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.முகாமில் பொதுமக்கள் மனுக்கள் வழங்கி வந்ததை கலெக்டர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டார்.பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், பரமக்குடி நகர் மன்றத்தலைவர் சேது கருணாநிதி,சமூகப்பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் மாரிச்செல்வி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் எம்.மாரிமுத்து, பரமக்குடி வட்டாட்சியர் ரவி, பரமக்குடி நகர் மன்ற துணைத்தலைவர் குணா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
92
You must be logged in to post a comment.