
மதுரை யாகப்பா நகரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள 31வது வார்டு பகுதியில் சில சமூக விரோதிகளால் மக்களின் எதிர்ப்பையும் மீறி மக்கள் புழங்கும் பகுதியில் பன்றிகள் மேய விடப்பட்டுள்ளன. இதனால் இங்குள்ள பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவர்களும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளார்கள்.
மேலும் இந்த அசுத்தமான பிராணியால் அபாயகரமான நோய்களும் பரவ வாய்ப்பு உள்ளது. அதே சமயம் அத்தெருவில் மசூதி, சர்ச், கோயில் போன்று மக்கள் வணங்கும் வணக்கஸ்தலங்களும் உள்ளன. பொதுமக்கள் பல இடங்களில் புகார்களை தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநகராட்சி உடனடி நடவடிக்கை எடுக்குமா??
You must be logged in to post a comment.