திருப்பரங்குன்றம் அருகே ஹார்வி பட்டியில் செயல்படும் வாசன் கண் மருத்துவமனையில் அதி நவீன வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை அரங்கு புதிதாக நிறுவப்பட்டுள்ளது. இங்கு இரத்த அழுத்த நோய், சர்க்கரை நோயாளிகளுக்கு புதிய அதிநவீன லேசர் இயந்திரம் மூலம் 2 மணி நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஹார்வி பட்டி வாசன் ஐ கேர் மருத்துவமனை உள்ளது. இந்த புதிய அதி நவீன லேசர் வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை அரங்கை மதுரை மாநாகராட்சி 5-ல் மண்டல தலைவர் சுவிதா விமல் துவக்கி வைத்தார். இதில் தலைமை மருத்துவர் கமல்பாபு, மாமன்ற உறுப்பினர்கள் இந்திராகாந்தி, ஸ்வேதா சத்யன், உசிலை சிவா, டாக்டர்கள் முருகலெட்சுமி, ஷாலிணி, கீர்த்தி, பொது மேலாளர் பன்னீர் செல்வம், விஜயன் பிரான்சிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மருத்துவமனை தலைமை மருத்துவர் கமல் பாபு செய்தி அவர்களிடம் குறிப்பிடுகையில் தற்போது கண் மருத்துவமனைக்கு நவீன வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பாக கண்ணில் புரை மற்றும் சர்க்கரை நோய் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் அறுவை சிகிச்சை செய்ய மிகுந்த கால தாமதமாகும் தற்போது நவீன தொழில்நுட்பத்தில் லேசர் எந்திரங்கள் மூலம் அறுவை சிகிச்சை செய்யப்படுவதால் இரண்டு மணி நேரங்களில் அறுவை சிகிச்சை முடிந்து அன்று வீட்டிற்கு செல்லக்கூடிய நவீன வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களின் பார்வை திறன் குறைபாடு ?
தற்போது பள்ளி மாணவர்களுக்கான பார்வை குறைபாடுகள் அதிகமாக உள்ளது அவற்றை சிறப்பு முகாம்கள் மூலம் மாணவர்களின் கண்பார்வை சரி செய்ய ஏற்பாடு செய்துள்ளோம். மேலும் பெற்றவர்களும் தங்கள் குழந்தைகளை பார்வை திறனை அதிகரிக்க மருத்துவமனை செல்வது அவசியம்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் அறுவை சிகிச்சைக்கு புதிய முறை பயனுள்ளதா?
தற்போது கொண்டுவரப்பட்டுள்ள நவீன ரக ரேசர் எந்திரங்கள் மூலம் கருவிழியில் உள்ள குறைகளை உடனுக்குடன் சரி செய்ய முடியும் மேலும் தேவை இல்லாத ரத்தம் போன்றவை இழப்பீடு ஏற்படாது பழைய அறுவை சிகிச்சையில் பயன்படும் அளவினை விட மிகக் குறைந்த அளவில் துல்லியமான முறையில் நடைபெறுவதால் சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுகை உள்ளவர்கள் பயப்படத் தேவையில்லை உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கொள்ள தற்போதுள்ள சூழ்நிலைக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் நகர மற்றும் கிராமப்புற பகுதியில் உள்ளதால் கண் பார்வை, அறுவை சிகிச்சை மற்றும் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் காப்பீடு திட்டத்தின் கீழ் அரசு மற்றும் தனியார் காப்பீடு திட்டம் மூலம் கண் பார்வை குறைபாடுகளை செய்து கொள்ள வசதிகள் இருப்பதால் அதிக செலவுகளும் ஏற்படாது என வாசன் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கமல் பாபு கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.