Home செய்திகள்கீழக்கரை செய்திகள் விபத்தில்லா நகரம் – மதுரை – நாளை (04/02/2019) முதல் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி… பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டி அறிவிப்பு..

விபத்தில்லா நகரம் – மதுரை – நாளை (04/02/2019) முதல் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி… பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டி அறிவிப்பு..

by ஆசிரியர்

மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறையினரால் விபத்தில்லா டிசம்பர் என்ற தீவிர சாலை பாதுகாப்பு பிரச்சாரம் துவக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது, ஜனவரி மாதமும் மரண விபத்தில்லா மதுரை நகரம் என்ற பெயரில் சாலை பாதுகாப்பு பிரச்சாரம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இதன் பயனாக 60 % மரண விபத்துக்கள் கடந்த ஆண்டு இதே மாதத்தை ஒப்பிடுகையில் குறைக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து வருகின்ற 4 . 2 . 19 முதல் 10 . 2 . 19 வரை சாலை பாதுகாப்பு வாரவிழா கொண்டாடப்படவுள்ளது. அதில் முக்கியமாக இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் தலைக்கவசம் அணியவேண்டும் என்றும் , பாதசாரிகளை விபத்தில் காப்பது குறித்தும் மற்றும் மிதிவண்டி ஓட்டுனர்கள் மீதும் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது. ஏனென்றால் இவர்களே சாலை விபத்துக்களில் அதிக எண்ணிக்கையில் மரணமடைந்துள்ளனர் என்பதாலும் இந்த சாலை பாதுகாப்பு வார பிரச்சாரம் பிப்ரவரி மாதம் முழுவதும் தொடரும் என்பதை மதுரை மாநகர காவல்துறை சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பாக 30வது தேசிய சாலை ) பாதுகாப்பு வாரவிழா வருகின்ற 04 . 02 . 2019 முதல் 10 . 02 . 2019நடைபெற உள்ள நிகழ்ச்சிநிரல்கள்:-

04 . 02 . 2019 இருசக்கர வாகன காவல் ஆணையாளர் திங்கள் ஓட்டிகள் தலைகவச ஊர்வலம் ( Rider & Pillion Rider ).

05 . 02 . 2019 கண் பரிசோதனை முகாம் | தெப்பகுளம் எல்கை செவ்வாய் ( ஆட்டோ , கார் Pamphlets 1000 முதல் டிரைவர்கள் ).

06 . 02 . 2019 எமதர்ம ராஜா வேடமிட்டு 1 ) கோரிப்பாளையம் புதன் விழிப்புணர்வு பிரச்சாரம் 2 ) எம்ஜிஆர் பேருந்து நிலையம் 1000 முதல் Traffic Wardens & 3 ).

07 . 02 . 2019 சாலை பாதுகாப்பும் சமூக கட்டுரை போட்டி வியாழன் விழிப்புணர்வும் குறித்து அணைத்து பள்ளிகள் மதுரை 1000 முதல் மாணவர்கள் மற்றும் 1200 வரை மாணவியர்களுக்கு ( 6 பக்கங்கள் – கட்டுரை போட்டி பக்கத்திற்கு 20 வரிகள் ).

08 . 02 . 2019 அரசு அலுவலக காவல் ஆணையாளர் வெள்ளி ஊழியர்கள் மற்றும் அலுவலகம் 1000 முதல் காவலர்கள் ( பள்ளி 1200 வரை மாணவ மாணவியர்கள் வினாடி – வினா.).

09 . 02 . 2019 பாய்ஸ் கிளப் & பார்டி கோரிப்பாளையம் விழிப்புணர்வு எம்ஜிஆர் பேருந்து நிலையம் முதல் குரு தியேட்டர் சந்திப்பு வரை.

10 . 02 . 2019 சைக்கிள் & பைக் ரைடர் கோரிப்பாளையம் – ஆவின் ஞாயிறு விழிப்புணர்வு ஊர்வலம் சந்திப்பு – கே கே நகர் முதல் ஆர்ச் – தல்லாகுளம் வரை, பெருமாள் கோவில் வரை.

மேலும் கட்டுரைப் போட்டி  சாலை பாதுகாப்பும் – சமூக விழிப்புணர்வும் ” [ Road safety and Social Awareness ] என்ற தலைப்பில் இக்கட்டுரையானது மொத்தம் 6 பக்கங்களாகவும், ஓவ்வொரு பக்கமும் தலா 20 வரிகளுடன் தமிழில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

இப்போட்டியானது வருகின்ற 07 . 02 . 2019ம் தேதியன்று காலை 10 : 30 மணி முதல் 12 . 30 மணி வரை அந்தந்த பள்ளிகளில் நடத்தப்பட்டு , அதில் சிறந்த 5 கட்டுரைகளை பள்ளி நிர்வாகம் தேர்வு செய்து தகவல் தெரிவித்தபின் காவல் துறையினர் அந்த கட்டுரைகளைப் பெற்று நிபுணர்களின் உதவியுடன் சிறந்த 6 கட்டுரைகளை தேர்வு செய்து அந்த மாணவ , மாணவியர்களுக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களால் காவல் ஆணையர் அவர்களின் அலுவலகத்தில் பரிசுகள் வழங்கப்படவுள்ளது. இப்போட்டியில் அதிக மாணவர்கள் கலந்து கொள்ளும் பள்ளிக்கு மதுரை மாநகர காவல் துறை சார்பாக சாலை பாதுகாப்பிற்கான சுழற்சி கோப்பை வழங்கப்படும். பங்கு கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை, கட்டுரையை சேகரிக்க வரும் காவல் துறை அதிகாரிகளால் கணக்கிடப்படும்.

விருப்பமுள்ள மாணவ மாணவியர்களின் பெயர்களை அந்தந்த பள்ளியின் போட்டிக்குரிய ஒருங்கிணைப்பாளர் அவர்களின் தொடர்பு விபரங்களுடன் 06 . 02 . 2019ம் தேதி 01 . 00 மணிக்குள்ளாக காவல் துணை ஆணையர் போக்குவரத்து அவர்களின் அலுவலக இனையதளம் dctrafficmc2010@gmail . com மூலமாக பதிவு செய்து கொள்ள வேண்டும் .

வினாடி வினா வினாடி வினா போட்டியானது 08 . 02 . 2019 – ம் தேதி காலை 0930 மணிக்கு அழகர்கோவில் ரோட்டில் உள்ள மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. ஓங்வொரு பள்ளியிலிருந்தும் தலா 2 மாணவர்கள் கொண்ட ஒரு குழுவை தேர்வு செய்து அனுப்ப வேண்டும் . 06 . 02 . 2019ம் தேதி 01 . 00 மணிக்குள்ளாக காவல் துணை ஆணையர் போக்குவரத்து அவர்களின் அலுவலக இனையதளம் [email protected] மூலமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். வினாடி வினா போட்டியானது பங்கு கொள்ளும் குழுக்களின் எண்ணிக்கையைப் பொறுத்து இரண்டு சுற்றுகளாகவும் நடத்தப்படலாம்.

இக்கேள்விகளானது சாலை பாதுகாப்பு, விபத்து புள்ளிவிபரங்கள், சட்டம் சார்ந்த கருத்துக்கள், நற்பழக்கங்கள், சாலை விதிகள், வாகனத்தின் அடிப்படை தகவல்கள் , விபத்துக்களை தடுக்கும் மற்றும் குறைக்கும் யுக்திகள், பொதுஅறிவு போன்ற தலைப்புகளில் அமையும். இதன் விபரங்களை https://safemadurai.org என்ற இணையதள பக்கத்தில் பெறலாம் . நடுவரின் தீர்ப்பே இறுதியானதாக கருதப்படும் , இதில் முதல் 3 அணிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் காவல் ஆணையர் அவர்களால் வழங்கப்படும் .

குறிப்பு : இவ்வினாடி வினா போட்டி டாக்டர்.திரு.சுந்தர்நாதன் (மதுரை மாநகர வினாடிவினா சொசைட்டி) மேற்பார்வையில் நடைபெறவுள்ளது (9025374873). இவ்விரண்டு போட்டிகளிலும் 12ம் வகுப்பு மாணவ மாணவியர்கள் வரை கலந்து கொள்ளலாம் மேலும் இதுதொடர்பாக ஏனைய தகவல்கள் பெற 0452 2335565 மற்றும் 94981 05084 என்ற தொலைபேசியை தொடர்பு கொள்ள மதுரை மாநகர காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது .

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!