Home செய்திகள் மதுரை அண்ணாநகர் பகுதியில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி பாதுகாப்பு கருதி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பாதியிலேயே நிறுத்தம்…

மதுரை அண்ணாநகர் பகுதியில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி பாதுகாப்பு கருதி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பாதியிலேயே நிறுத்தம்…

by ஆசிரியர்

5 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மதுரை அண்ணா நகர் பகுதியில் “WOW MADURAI” என்ற தலைப்பில் ஹேப்பி ஸ்ட்ரீட் வாரத்தின் முதல் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் கொண்டாடுவதற்காக மதுரை மாநகராட்சி ஏற்பாட்டின் படி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல்துறையில் உரிய அனுமதி பெற்று HAPPY STEET நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாநகராட்சி எதிர்பார்த்த பொது மக்களை விட ஏராளமான மதுரை மாநகர் மட்டுமல்லாது புறநகர் பகுதிகளை சேர்ந்த ஏராளமான இளைஞர் இளம் பெண்கள் மற்றும் குடும்பத்தினருடன் வந்த பொது மக்களால் மதுரை அண்ணா நகர் முதல் மேலமடை வரை 50,000 மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு இருந்தனர்

மேலும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சூரி தமிழக பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி டி ஆர் பழனி தியாகராஜன் மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையாளர் மேயர் துணை மேயர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே கட்டுக்கடங்காத அளவில் கூட்டம் இருந்ததால் மேடையின் முன்பு செல்வதற்கு இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் முண்டியடித்துக் கொண்டனர் இதில் சிலர் பேரிக்கடை உடைந்து உள்ளே விழுந்ததால் பலருக்கும் காயம் ஏற்பட்டது கூட்ட நெருச்சலில் சிலருக்கு மூச்சுமுட்டுதல் மற்றும் மயக்கம் அடைந்தனர்.

தொடர்ந்து காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் வலியுறுத்தி வந்தனர் முறையான பாதுகாப்பு வசதிகள் எதுவும் ஏற்படுத்தித் தராமல் மதுரை மாநகராட்சி நிர்வாகத்தினர் ஹாப்பி ஸ்ட்ரீட் என்று நிகழ்ச்சி ஏற்படுத்தி இருந்தது ஆனால் அவசரத்திற்காக பாதுகாப்பு கருதி 108 ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட எந்த ஒரு வசதியும் ஏற்படுத்தி தரவில்லை. காவல்துறையினர் கட்டுக்கடங்காத அளவு கூட்டம் நிறைந்து இருந்ததால் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி ஆனது பாதிலேயே நிறுத்தப்பட்டது இதனால் பெரிய அளவு எதிர்பார்த்து வந்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!