Home செய்திகள்மாநில செய்திகள் சோழவந்தான் அருகேவயல்வெளிக்குள் பிணத்தை தூக்கிச் செல்லும் அவலம்..

சோழவந்தான் அருகேவயல்வெளிக்குள் பிணத்தை தூக்கிச் செல்லும் அவலம்..

by Askar

சோழவந்தான் அருகே
வயல்வெளிக்குள் பிணத்தை தூக்கிச் செல்லும் அவலம்..

சோழவந்தான் அருகே வயல் வெளிக்குள் மயானத்திற்கு பிணத்தை தூக்கிச் செல்லும் அவல நிலை உள்ளது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சோழவந்தான் அருகே மேல்நாச்சிகுளம், கீழ் நாச்சிகுளம் கரட்டுப்பட்டி, போடிநாயக்கன்பட்டி கிராமங்களில் வசிக்கும் ஒரு சமுதாயத்திற்கு பரம்பரை பரம்பரையாக தனி சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாடு கோட்டைமேடு நரிமேடு இரண்டு கிராமங்களுக்கும் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த சுடுகாட்டுக்கு செல்ல முன்பு பெரியார் பாசன கிளை கால்வாய் வழியாக படிக்கட்டு அமைக்கப்பட்டு இருந்தது. அதையொட்டி உள்ள கரை ஓரமாக சென்று மாயனத்திற்கு சென்று வந்தனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக கிளை கால்வாய் அகலப்படுத்தப்பட்ட போது படிக்கட்டுகள் இருந்த இடத்தில் மீண்டும் படிக்கட்டு அமைக்காமல் சமதளமாக பூசி விட்டதால் மயானத்திற்கு செல்லும் வழி தடைபட்டு போனது. இதனால் தற்போது நரிமேடு சாலை வழியாக வயல்வெளிக்குள் செல்ல வேண்டிய அவல நிலை உருவாகி உள்ளது. நேற்று காலை ஆறு முப்பது மணிக்கு கரட்டுப்பட்டியை சேர்ந்த மோகன் (வயது 53) என்பவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடலை காலை 11.30 மணிக்கு தகனம் செய்வதற்காக வயல்வெளிக்குள் உறவினர்கள் வேதனையோடுதூக்கி வந்தனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவருக்கு மனு கொடுத்து பொதுப்பணித்துறை மூலம் சிறுபாலம் அமைக்க உத்தரவு பெறப்பட்ட பின்னும் பல ஆண்டுகளாக பாலம் கட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த அவல நிலை தொடராமல் இருக்க விரைவாக பாலம் கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com