மதுரை வில்லாபுரத்தில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு..
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 84 வது வார்டு வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சுமார் 5000 மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த ஒரு வருடங்களாக பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு அடிக்கடி கழிவு நீர் வீட்டின் குடியிருப்பு முன்னால் தெப்பம் போல் காட்சியளிப்பதாகவும் மற்றும் சாலை வசதி இல்லை தெருவிளக்கு வசதி இல்லை என்றும் இதுகுறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுத்தும் கோரிக்கைகளை முன்வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மேலும் குடிநீரில் சாக்கடை தண்ணீர் கலந்து வருவதாகவும் பொதுமக்கள் வேதனையுடன் குற்றம் சாட்டி வருகின்றனர் இந்த நிலையில் பலமுறை நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தெற்கு வாசலில் இருந்து விமானம் நிலையம் செல்லும் சாலையில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இப்பகுதியில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைப்பதற்கான அனைத்து பகுதிகளும் நிறைவடைந்த நிலையில் பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் சரி செய்யாததால் சாலை அமைக்கும் பணி தாமதப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment.