காமராஜர் செய்த சாதனையை போல் தமிழகத்தில் எந்த முதல்வரும் செய்யவில்லை – மதுரையில் நடைபெற்ற சமுதாய மாநாட்டில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பேச்சு..
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் நாடார் மகாஜன சங்க 72 வது ஆண்டு மாநாடு நடைபெற்றது இதில் தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார் அவர் பேசியதாவது
நான் மற்ற கவர்னர் போல் அல்லாமல் எப்போதும் போல் தான் சுற்றி வருகிறேன்.எந்த நிகழ்ச்சிக்கும் வருகிறேன் என்று நேரடியாக சொல்ல முடியாது.ஆனால் இந்த மாநாட்டிற்கு அதிகாரிகளை கூட கேட்காமல் வருகிறேன் என நேரடியாக உறுதியளித்தேன் இந்தியாவில் இரு மாநிலத்தில் தேசிய கொடியேற்றிய ஒரே ஆளுநர் நான் தான்.அது மட்டுமல்ல இரு மாநில முதல்வர்களுக்கு ராஜ்பவனில் விருந்தளித்தவரும் நான் தான்.அழைப்பு குடுத்தால் யாராக இருந்தாலும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் செல்ல வேண்டும் என்பது தான் தமிழர்கள் குணம் ஆனால் சிலர் அழைப்பு கொடுத்தும் வர மறுக்கிறார்கள் பாஜகவில் சேர்ந்ததற்கு ஒரு வருடம் பேசாமல் இருந்தவர் என் தந்தை.இந்த சமுதாய இளைஞர்களுக்கு கொடுத்த கல்வி தான் சமுதாய முன்னேற்றத்திற்கு காரணம் என பேசிய தமிழிசை நான் ஆளுநர் பதவியேற்ற போது பல்வேறு விமர்ச்சனங்களை வைத்தனர்.தெலுங்கானா முதல்வருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் இந்த ஆளுநர். ராஜ்பவனுக்கே 3 ஆண்டாக வர மறுத்த வரை மக்கள் முதல்வர் பதவியிலிருந்து தூக்கி எறிந்தனர்.சிறு வயதில் காமராஜரை பார்க்க காத்திருந்த அனுபவமே என்னை அரசியல் கட்சி தலைவராகவும், ஆளுநராகவும் உயர்த்தியிருக்கிறது.காமராஜர் முதல்வராக செய்த சாதனையை எந்த முதல் வரும் செய்யவில்லை என பேசிய தமிழிசை செளந்திரராஜன் கருப்பு பணத்தையும், பதுக்கலையும் ஒழிக்க நான் எடுத்த முயற்சியை காமராஜர் இருந்தால் என்னை பாராட்டியிருப்பார் என பிரதமர் மோடி பேசியதாக மேடையில் உரையாற்றிய தமிழிசை சௌந்தர்ராஜன் எவ்வளவு தூரம் எத்தனை மைல் பயணம் செய்தாலும் உங்கள் மலர்ந்த முகங்களே எனக்கு பிடிக்கும். என்னிடம் பலரும் உங்களுக்கு எந்த பூ பிடிக்கும் என கேட்டுள்ளனர். நான் அவர்களிடம் எனக்கு தலையில் வைக்க மல்லிகை பிடித்தாலும் தாமரை தான் எனக்கு பிடித்த மலர் கம்பராமாயணத்தில் கூட மலர்ந்த முகமுடையாள் என தாமரை மலரை உதாரணம் காட்டியுள்ளார்கள். அதனால் மறுபடியும் சொல்கிறேன் எனக்கு பிடித்த மலர் தாமரை தான் ஏனென்றால் தாமரைதான் தேசிய மலர் என தனது உரையை நிறைவு செய்தார் தமிழிசை செளந்தராஜன்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.