Home செய்திகள் சோழவந்தான் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி..

சோழவந்தான் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி..

by Abubakker Sithik

சோழவந்தான் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி..

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் வடக்கு தெருவை சேர்ந்த விவசாயி ஆலடி (65). இவர் முள்ளிப்பள்ளம் குருவித்துறை சாலையில் உள்ள தோப்பிற்கு காலையில் சென்றுள்ளார். எதிர்பாராத விதமாக அங்கு குறுக்கே சென்ற மின் வயர் தென்னை மரத்தில் உரசியதில் ஆலடிமீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இது குறித்து முள்ளிப்பள்ளம் கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன், கிராம உதவியாளர் ராமமூர்த்தி ஆகியோர் காடுபட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில் காடுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் ராஜு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!