Home செய்திகள் அலங்காநல்லூர் தேர்தல் பிரச்சாரத்தில் செல்லூர் ராஜுவை விஞ்ஞானி என பேசிய டிடிவி தினகரன்..

அலங்காநல்லூர் தேர்தல் பிரச்சாரத்தில் செல்லூர் ராஜுவை விஞ்ஞானி என பேசிய டிடிவி தினகரன்..

by Abubakker Sithik

மதுரை அலங்காநல்லூரில் டிடிவி தேர்தல் பிரச்சாரம்; செல்லூர் ராஜுவை விஞ்ஞானி என டிடிவி தினகரன் பேச்சு..

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே தனிச்சியம் பகுதியில் தேனி நாடாளுமன்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் டிடிவி தினகரன் இரண்டாவது நாளாக தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது ஆர் பி உதயகுமாரை பபூன் என்றும், செல்லூர் ராஜுவை விஞ்ஞானி என்றும் டிடிவி தினகரன் கூறினார். அதிமுக பொதுச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் ஆன பின்பு நாங்கள் விரல் சூப்பிக்கொண்டு இருக்க முடியாது. இன்று டிடிவி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கியதன் காரணம் உண்மையான தொண்டர்களுக்கு ஜனநாயக கட்சியான அதிமுகவை மீட்டெடுப்பதற்கும் அம்மாவின் கட்சியை மீட்டெடுப்பதற்கும் தான் என்றும், அதற்கு அமமுக ஒரு ஆயுதமாக உள்ளது. ஆர் கே நகர் தேர்தலில் மட்டும் தானே வெற்றி பெற்றீர்கள். அதன் பிறகு நடைபெற்ற மக்களை தேர்தலில் ஜெயிக்கவில்லை. தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜெயிக்கவில்லையே என்று கூறுகிறார்கள் என்று கேட்டபோது, அமமுகவை மக்கள் மூன்றாவது அணியாக தான் பார்த்தார்கள். அவர்களுக்கு ஒன்று சொல்கிறேன் நாய் என்றும் சிங்கமாகாது நாய் ஓநாயாக வேண்டுமானால் மாறலாம் என்றும், நாங்கள் அவர்கள் வீட்டில் காவலாளியாகவும் அடிமைகளாகவும் இருந்தோம் என்று அதிமுகவினர் கூறுகிறார்களே என்ற கேள்விக்கு காவலாளியாக இருந்தவங்க இன்னும் காவலாளியாக தான் இருக்கிறார்கள். அவர்கள் நன்றியுடன் உள்ளார்கள். இவர்கள் நன்றி இல்லாதவர்கள். துரோக சிந்தனை உள்ளவர்கள் அதனால் தான் இரட்டை இலை பலவீனமாகி வருகிறது.

நானும் பன்னீரும் இணைந்து இருப்பது இரட்டை இலையை மீட்டெடுக்கத்தான். மீட்டெடுத்து அதை திரும்ப தொண்டரிடம் ஒப்படைப்பதற்காக தான் இணைந்து இருக்கிறோம். ஒரு பழமொழி சொல்வார்கள் திருடிட்டு ஓடுறான் என்று திருடனே சொல்வதைப் போல உங்களிடம் இருந்து இரட்டை இலையை பெற்று தொண்டர்களிடம் கொடுப்போம். இந்தி எதிர்ப்பு குறித்து அண்ணாமலை கூறிய கருத்திற்கு அண்ணாமலை கூட்டணியில் இருக்கிறார் என்பதற்காக சொல்லவில்லை. பேரறிஞர் அண்ணா 1967இல் அதாவது 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியை திணிக்க முயன்ற போது அதை கடுமையாக எதிர்த்தார். அப்போது காங்கிரஸில் இருந்த காமராஜருக்கு எதிராக மக்கள் திரண்டார்கள். ஆனால் அந்த நிலை இப்போது இல்லை.

சமீபத்தில் சர்வே ஒன்று படித்தேன் தாய்மொழி கல்வி படிப்பவர்கள் தமிழகத்தில் 9 சதவீதம் பேர் மட்டுமே இருக்கிறார்கள். ஆனால் குஜராத்தில் 70 சதவீதம் பேர் இருக்கிறார்கள். அதாவது தமிழ்நாட்டில் தாய்மொழி கல்வியான தமிழ் படிப்பவர்கள் 9 சதவிதமாக குறைந்துள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு நீங்களே முடிவு எடுத்துக் கொள்ளுங்கள். தமிழ் நாட்டில் போட்டி அதிமுக திமுகவிற்கு தான் என்று கூறுகிறார்களே என்ற கேள்விக்கு அதற்கு பதில் ஜூன் 4-ம் தேதி தெரியும் என்றும் சசிகலா பிரச்சாரத்திற்கு வருவாரா என்ற கேள்விக்கு அதிமுகவை மீட்டெடுப்பதில் இருப்பவர் எப்படி பிரச்சாரத்திற்கு வருவார் என்றார்.

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com