மதுரை அவனியாபுரம் மகா காளியம்மன் கோவில் திருவிழா..
மதுரை அவனியாபுரத்தில் மகா காளியம்மன் திருக்கோவிலில் 74 ஆம் ஆண்டு பங்குனி பொங்கல் விழா நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட பால்குடம், அலகு காவடி பறவை காவடி, தீ மிதி திருவிழாவில் பங்கேற்றனர். அவனியாபுரம் பசும்பொன் நகரில் உள்ள அருள்மிகு மகா காளியம்மன் திருக்கோயிலில் 74 ஆம் ஆண்டு பங்குனி பொங்கல் விழா நடைபெற்றது. மகாகாளியம்மன் திருக்கோவில் மறவர் சங்கத் தலைவர் பாலச்சந்திரன், துணைத் தலைவர் வேல்முருகன், செயலாளர் முத்து மணி மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். மகா காளியம்மன் பங்குனி பொங்கல் உற்சவ விழாவை முன்னிட்டு பத்து நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இன்று ஐந்தாம் நாள் விழாவாக பால்குடம் மற்றும் பறவை காவடி அழகு காவடி தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் பெண்கள் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் குழந்தைகளுடன் தீமிதி திருவிழாவில் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.