Home செய்திகள்உலக செய்திகள் சிவசேனா கட்சியின் ஆலோசனை கூட்டம்; முக்கிய தீர்மானம்..

சிவசேனா கட்சியின் ஆலோசனை கூட்டம்; முக்கிய தீர்மானம்..

by Abubakker Sithik

திருப்பரங்குன்றத்தில் சிவசேனா கட்சி சார்பில் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வரும் பாராளுமன்ற தேர்தலில் 15 இடங்கள் போட்டியிடுவது குறித்து ஆலோசனை

மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா தனியார் மண்டபத்தில் சிவசேனா கட்சி சார்பில் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தென்மண்டல அமைப்புச் செயலாளர் காமேஸ்வரன் முன்னிலை வகித்தார். மாநில இளைஞரணி தலைவர் சாலை முத்து மற்றும் மாநில மகளிர் அணி செயலாளர் ஜெயா வரவேற்றனர். மாநில முதன்மைச் செயலாளர் தண்டபாணி, மாநில பொதுச்செயலாளர் ஜெயக்குமார் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் நிர்வாகிகள் 30 பேர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 11 திர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கர்நாடக சட்டமன்றத்தில் மேகதாது அணை கட்டுவோம் என கூறிய கர்நாடக துணை முதல்வர் சிவகுமாரை கண்டித்தும், தமிழகத்தில் போதைப் பொருள் கலாச்சாரத்தை தடுப்பதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும், மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்க கோரியும், சுதந்திர போராட்ட தியாகி அழகுமுத்துக் கோன் சிலை அமைக்கவும், சிவகங்கை மாவட்டம் தூதை பஞ்சாயத்தில் தடுப்பணை அமைப்பது உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் மாநில பொது செயலாளர் ஜெயக்குமார் கூறுகையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி சார்பில் 15 இடங்களில் போட்டியிடுவதற்காக ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதனை அடுத்து வரும் 24ஆம் தேதி திருப்பூரில் நடைபெறும் தென் மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!