Home செய்திகள்உலக செய்திகள் மதுரையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்கி விழிப்புணர்வு..

மதுரையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்கி விழிப்புணர்வு..

by Abubakker Sithik

மதுரையில் ரோட்டரி சங்கம் சார்பில் புற்று நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்கி விழிப்புணர்வு..

மதுரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து மல்லிகை ரோட்டரி சங்கம் சார்பில் நறுமணம் என்ற பெயரில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை மல்லிகை ரோட்டரி சங்க தலைவர் உமாராணி தனசேகரன் தலைமை தாங்கினார். சர்வதேச ரோட்டரி இயக்குனர் முருகானந்தம், ரோட்டரி கவர்னர் ஆனந்த ஜோதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவரான சரத்குமார் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

நடிகர் சரத்குமார் பேசும் போது, ரோட்டரி சங்கங்கள் சமூக சேவை செய்வது என்பது வரவேற்கதக்கது. தருமி பொற் காசுகளுக்காக காத்திருந்தார் என்று சொல்வார்கள். ஆனால் ரோட்டரி உறுப்பினர்கள் புற்று நோய் போன்று பல திட்டங்களுக்கு கேட்காமலேயே நீங்கள் பொற்காசுகளை வாரி வழங்குகிறீர்கள் என்பதை பார்க்கிற பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுவும் கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கு நிதி வழங்கியது பாராட்டுதலுக்கு உரியது.

ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு சேவை செய்ய வேண்டும் ஏழைகளுக்கு உதவுவது கடவுளுக்கு செய்கிற சேவையாக நான் கருதுகிறேன். அதுவும் குறிப்பாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்குவது என்பது மிகப்பெரிய பணி. இந்த பணியை செய்து வருகிற மல்லிகை ரோட்டரி சங்கத்தை நான் மனதார பாராட்டுகிறேன். தொடர்ந்து ரோட்டரி உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார்.

மதுரை ரோட்டரி லஹரி பள்ளியைச் சார்ந்த பெருமக்கள் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ரூபாய் 25000 நன்கொடை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் மண்டல ஒருங்கிணைப்பாளர் அசோக், உதவி ஆளுநர் கவுசல்யா, வழக்கறிஞர் சாமுண்டி போஸ், மல்லிகை ரோட்டரி சங்க செயலாளர் பத்மாவதி, பொருளாளர் பூங்கொடி, ஒருங்கிணைப்பாளர் தேவிகா மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!