Home செய்திகள் பிறப்புச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தவருக்கு மாநகராட்சி ஆணையாளரே விரைந்து சான்று அனுப்பியதால் குடும்பத்தினர் நெகிழ்ச்சி..

பிறப்புச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தவருக்கு மாநகராட்சி ஆணையாளரே விரைந்து சான்று அனுப்பியதால் குடும்பத்தினர் நெகிழ்ச்சி..

by Abubakker Sithik

வெளிநாடு செல்வதற்கு மகனின் பிறப்பு சான்றிதழில் பெயர் இல்லாத காரணத்தால் மாநகராட்சி அலுவலகத்தில் பெயர் சேர்க்க விண்ணப்பம் செய்து பத்து நாள் ஆகியும் பிறப்புச் சான்றிதழ் கிடைக்காததால் ஆணையருக்கு whatsapp மூலம் நிலைமையை சொல்லி செய்தி அனுப்பிய இரண்டு மணி நேரத்தில் மாநகராட்சி ஆணையாளரே பிடிஎப் மூலமாக பிறப்புச் சான்றிதழ் அனுப்பி வைத்தார் . இதனால் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர்.

மதுரை மாவட்டம் மாடக்குளம் பகுதி சேர்ந்த லலிதா அவரது மகன் குவைத் நாட்டில் இன்ஜினராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சில மாதங்களுக்கு முன் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பார்ப்பதற்காக தாயை தன்னுடன் அழைப்பதற்காக குவைத் நாட்டில் விசாவுக்காக விண்ணப்பித்த போது இவர் 1985 இல் பிறந்ததால் பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாமல் இருந்துள்ளது. இது குறித்து மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி இவரது தாய் லலிதா விண்ணப்பித்தார். எனினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வேறு வழி இன்றி லலிதா இன்று காலை மதுரை மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமாருக்கு whatsapp வாயிலாக தனது தன் பேத்தியை பார்க்க நான் குவைத் நாட்டுக்கு செல்ல வேண்டும் எனவும், பத்து நாளாகியும் பிறப்புச் சான்றிதழ் பெயர் சேர்த்து எனக்கு கிடைக்கவில்லை எனவும் தாங்கள் உரிய நடவடிக்கை எடுத்து பிறப்புச் சான்றிதழ் பேர் இணைத்து தரும்படி கோரிக்கை விடுத்தார். வாட்ஸ் அப்பில் அனுப்பிய அடுத்த வினாடி ஓகே என்று பதிலும் கொடுத்து விட்டார். 1:30 மணி அளவில் pdf ஆக மதுரை மாநகராட்சி ஆணையாளர் வாட்ஸ் அப் எண்ணிலிருந்து பெயரிணைத்த பிறப்புச் சான்றிதழ் pdf வாயிலாக அவருக்கு அனுப்பி வைத்தார்.

துரித நடவடிக்கை எடுத்த மதுரை மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமாருக்கு அவர்களது குடும்பத்தினர் மிகுந்த நன்றியை தெரிவித்தனர். மேலும் இன்னும் சில நாட்களில் தன் பேத்தியை பார்க்கும் சந்தோஷத்தில் இருப்பதாகவும் தெரிவித்து லலிதா சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டுள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!