திருப்பரங்குன்றம் ஒன்றிய கூட்டத்தில் அதிகாரிகள் இல்லாமல் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்; திமுக அதிமுக கவுன்சிலர்கள் காரசார விவாதம்..
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் திருநகர் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் மணி, பேரூராட்சி பிரேமா ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் வேட்டையன், துணைத் தலைவர் இந்திரா மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஒன்றிய கூட்டத்தில் விவசாயத்துறை, கூட்டுறவு, சமுக நலத்துறை, பொறியியல் துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் இல்லாமல் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடத்தியதற்கு அதிமுக ஒன்றிய கவுன்சிலர் கண்டனம் தெரிவித்தார். அண்மையில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டடத்தை திமுக மாவட்ட செயலாளரை வைத்து திறந்ததற்கு கண்டனம் தெரிவித்ததால் திமுக-அதிமுக கவுன்சிலர்களுக்கு இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய பெருந்தலைவர் வேட்டையன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் துணைத் தலைவர் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். அதிமுக திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் பங்கேற்ற நிலையில் கூட்டம் தொடங்கியவுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைவதற்கு இடம் ஒதுக்கியவருக்கு கல்வெட்டு வைக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அதிமுக ஒன்றிய கவுன்சிலர் நிலையூர் முருகன், கடந்த சில மாதங்களாகவே ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் துறை அதிகாரிகள் இல்லாமல் நடைபெற்று வருகிறது. துறை அதிகாரிகள் இல்லாததால் தங்களது குறைகளை நிவர்த்தி செய்ய முடியவில்லை எனவே அடுத்தடுத்த கூட்டங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். தொடர்ந்து பேசி அவர் அண்மையில் புதிதாக கட்டப்பட்டு தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்திற்கு தனியாக திறப்பு விழா நடத்தியதோடு மட்டுமல்லாமல் அரசு பதவியில் இல்லாத திமுக மாவட்ட செயலாளரை வைத்து ரிப்பன் வெட்டி அலுவலகத்தில் தொடங்கி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அமைச்சர் அல்லது எம்.எல்.ஏக்கள் அல்லது அதிகாரிகள் மட்டுமே இது போன்ற நிகழ்வுகளில் பங்கேற்று துவக்கி வைக்க வேண்டும் ஆனால் அரசுத்துறை சம்பந்தமில்லாத கட்சி நிர்வாகியை அழைத்து புதிய அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தது கண்டனத்துக்குரியது என தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த திமுக கவுன்சிலர் ஒருவர் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் மாவட்ட செயலாளராக இருந்த ராஜன் செல்லப்பா அரசு கட்டிடத்தை திருப்பரங்குன்றம் தொகுதியில் தொடங்கி வைத்ததாக தெரிவித்ததற்கு அப்போது அவர் வடக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். எம்எல்ஏ என்பதால் அவர் எங்கு வேண்டுமானாலும் அரசு கட்டிடங்களை திறந்து வைக்கலாம் என இருவருக்கும் காரசார விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஒன்றிய பெருந்தலைவர் வேட்டையன் கூட்டத்தை நிறைவு செய்து வைத்தார்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.