சாலையில் திரியும் விலங்கினங்கள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் நடந்து செல்லும் பொதுமக்கள்..

சாலையில் திரியும் விலங்கினங்கள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் நடந்து செல்லும் பொதுமக்கள்..

மதுரை மாநகர் சாலையில் மனிதர்களின் நடமாட்டத்தை விட விலங்குகள் நடமாட்டம் அதிகமாகி கொண்டிருக்கிறது. முன்பு அங்கு ஒன்றும் இங்கு ஒன்றும் ஆக மாடுகள் நாய்கள் சாலையில் திரியும். ஆனால், நாய்கள், மாடுகள், இந்த வரிசையில் எருமை மாடுகளும் குதிரைகளும் சேர்ந்து விட்டன. சாதாரணமாகவிலங்குகள் சாலையில்சென்று கொண்டிருப்பதால்வாகனத்தில் செல்பவர்களும் நடந்து செல்பவர்களும்பயந்தபடியே செல்கிறார்கள் மதுரை மாநகராட்சி நிர்வாகம் ,உடனடியாக இது போன்ற நான்கு கால் உயிரினங்களை பிடித்து செல்ல வேண்டும் மேலும் தக்க அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் வைக்கின்றனர். செய்தியாளர், வி.காளமேகம்