திருமங்கலம் அருகே கோயில் உண்டியலில் ஊழல்! கேள்வி கேட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டல்! பரபரப்பு குற்றச்சாட்டு..
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மேல கோட்டை பாரதிநகர் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த செருவலிங்க அய்யனார் கோவில் நிதி பணத்தை ஊழல் செய்ததை, எதிர்த்து கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்த கோயில் நிர்வாகஸ்தர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி,மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம்,இக்கோயிலின் வடக்கம்பட்டி மற்றும் புளியம்பட்டி வகையறாவினரை சார்ந்த கர்ணன் என்பவர் அளித்த புகாரின் பேரில், திருமங்கலம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டு, கோவிலின் செயலாளர் செருவன், பொருளாளர் கணேசன், முன்னாள் பொருளாளர் வேலுச்சாமி, முன்னாள் செயலாளர் சுப்பையா உட்பட ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தியுள்ளனர். கடந்த ஆண்டு (2023) இக்கோவிலின் உண்டியலின் பூட்டை உடைத்து , அதிலிருந்த ரூபாய் ஒரு லட்சத்திற்கு மேலான பணத்தை நிர்வாகஸ்தர்கள் கொள்ளை அடித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் , திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில், இது தொடர்பாக ஏற்கனவே புகார் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இக்கோவிலின் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக, கோவில் நிர்வாகஸ்தர்கள் , கோவில் தலைவர் பெயரின்றி ரசீது தயாரித்து வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ராஜகோபுரம் கட்டுமான பணிகள் நடைபெறுவதற்காக தல கட்டு வரி என்ற பெயரிலும் என்ற நன்கொடை ரசீது என்ற பெயரிலும் இருவகையான ரசீது புத்தகங்களை தயார் செய்து வசூல் செய்து வருகின்றனர். இதனை எதிர்த்துக் கேட்ட இக்கோயிலின் வடக்கப்பட்டி, புளியம்பட்டி வசையறாவைச் சார்ந்த கர்ணன் என்பவரை கோவில் நிர்வாகஸ்தர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக, கர்ணன் மதுரை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.