Home செய்திகள் அரசுபள்ளியில் படித்ததன் நினைவாக அரசு பள்ளிகளுக்கு நிதி வழங்கிய மதுரையைச் சேர்ந்த சிங்கப்பூர் தொழிலதிபர் திலிப் பாபு..

அரசுபள்ளியில் படித்ததன் நினைவாக அரசு பள்ளிகளுக்கு நிதி வழங்கிய மதுரையைச் சேர்ந்த சிங்கப்பூர் தொழிலதிபர் திலிப் பாபு..

by Askar

அரசுபள்ளியில் படித்ததன் நினைவாக அரசு பள்ளிகளுக்கு நிதி வழங்கிய மதுரையைச் சேர்ந்த சிங்கப்பூர் தொழிலதிபர் திலிப் பாபு..

.அவனியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூபாய் 31 லட்சம் மதிப்பீட்டில் மாணவர்களுக்கான கணினி வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாணவர்களுக்கான கழிப்பறை கட்டிடம் பூமி பூஜை விழா.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் திலிப் பாபு. இவர் தற்போது சிங்கப்பூரில் இன்போடெக் கணினி நிறுவன தலைமை செயல் அலுவலராக உள்ளார்.

மதுரை திருநகரை பூர்வீகமாக கொண்ட சேர்ந்த திலிப் பாபு சிறு வயதில் மதுரை திருநகர் அரசுப் பள்ளியில் படித்ததின் நினைவாக திருநகர் சாரா பள்ளி மற்றும் பல்வேறு பள்ளிகள் தன்னார்வ அமைப்புகளுக்கு அடிப்படை வசதிகள் நிறைவேற நிதி வழங்கி வருகிறார்.

இந்நிலையில் மதுரை அவனியாபுரம் பொட்டக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் கணினி மேம்பாட்டு திறன் வளர்ச்சிக்கு உதவும் விதமாக 5 கணினிகள் மற்றும் சுகாதார மேம்பாடு திட்டத்தின் கீழ் மாற்றுதிறனாளிகள், மாணவ மாணவிகளுக்கான கழிப்பறை கட்டிடம் உள்பட ரூபாய் 31 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டு விழா நடை பெற்றது.

விழாவில் இன்போ டெக் கணினி செயல் அலுவலர் திலிப் பாபு ரமிலா, திருநகர் பேரூராட்சி முன்னாள் தலைவர் பலராமன் அவனியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியபாமா துணை தலைமை ஆசிரியர் லதா மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பூமி பூஜை விழாவில் கலந்து கொண்டனர்.

திலிப் பாபு செய்தியாளர்களிடம் கூறும் போது

நான் திருமதூர் பகுதியில் பிறந்து வளர்ந்தவன் அங்குள்ள அரசு பலநிலை பள்ளியில் குறைந்த கட்டணத்தில் கல்வி பயின்றேன் தற்போது சிங்கப்பூர் குடியுரிமை பெற்று சிங்கப்பூரில் இன்போடெக் எனும் கணினி தொழில் செய்து வருகிறேன் என்னால் பிறந்த ஊருக்கும் நாட்டிற்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு அரசு பள்ளிகளை தத்தெடுத்து அதற்காகபள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து வருகிறோம் இந்நிலையில் அவனியாபுரம் பள்ளியில் மாணவர்களுக்கு தேவையான கணினிகள் மற்றும் ஆசிரியர் மற்றும் அடிப்படை வசதிக்கு தேவையான கழிப்பிட வசதிகள் சுமார் 31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இன்று பூமி பூஜை நடைபெற்றது. இன்னும் மூன்று மாதத்தில் பணிகள் நிறைவடையும் மாணவர்கள் பயனடையும் வகையில் முதல் கட்டமாக இப்பணிகள் நடைபெறுகிறது அடுத்த கட்டமாக இப்பள்ளிக்கு தேவையான கட்டிடங்கள் கட்டும் பணியில் ஈடுபட உள்ளோம் எனக் கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!