காதலுக்காக வீட்டை துறந்த கேரள ஆசிரியை … உடனடியாக மீட்ட மதுரை காவல்துறை..

கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம், கடினம்குளம், அரத்துவாய் ஹவுஸ் என்ற ஊரைச் சேர்ந்த ஆண்ட்ரோஸ் என்பவர் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர். இவரது மகள் 21 வயது நிரம்பிய ஆன்சி ஆன்றோ தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகின்றார். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த அபுதாபியில் (துபாய்) வேலை செய்து வரும் நபர் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. வசதி குறைவாக இருப்பதால் காதலை கைவிட பெற்றோர்கள் வற்புறுத்தி உள்ளனர்.

இந்நிலையில் காதலை கைவிட மனமில்லாமல் 27/01/2019 அன்று பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு சென்னை சென்று விட்டார் பெண் ஆசிரியர். இதுதொடர்பாக அவரது பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் கேரளா மாநிலம் கடினம் குளம் காவல்நிலைய குற்ற எண்.149/2019 பிரிவு.பெண் காணவில்லை என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். சென்னை ரயில்வே கட்டுப்பாட்டு அறை தகவலின்பேரில் காணாமல் போன இளம் ஆசிரியை ஆன்சி ஆன்றோ 28.01.2019ம் தேதி சென்னையிலிருந்து மதுரை வரும் வைகை விரைவு வண்டியில் வருவதாக செல்போன் மூலம் தகவல் அறிந்த மதுரை ரயில்வே டி.எஸ்.பி திரு.R.மன்னர் மன்னன் தலைமையிலான இரவு பணி போலீசார் SI.சிராஜுதின், SSI. ஜெயசீலன், தலைமைக் காவலர் நெப்போலியன் ஆகியோர் ரயிலில் இறங்கிய பயணிகளை ஆய்வு செய்தபோது (இரவு பத்து மணி) கேரள போலீசாரால் தேடப்படும் ஆன்சி ஆன்றேவை கண்டுபிடித்து பெண் காவலர்கள் சுதா, ராணி ஆகியோரின் பாதுகாப்பில் உயர் வகுப்பு பயணிகள் தங்கும் அறையில் தங்க வைக்கப்பட்டு அவரது தந்தைக்கு தகவல் தெரிவித்து அவரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது. காணாமல் போன வெளிமாநில ஆசிரியை கண்டுபிடித்து ஒப்படைத்த மதுரை ரயில்வே காவல்துறையினரை உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்