Home செய்திகள் வால்பாறை பகுதி மக்களின் அச்சத்தை போக்க அரசு மருத்துவமனையில் கொரொனா மருத்துவ பரிசோதனை மையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…

வால்பாறை பகுதி மக்களின் அச்சத்தை போக்க அரசு மருத்துவமனையில் கொரொனா மருத்துவ பரிசோதனை மையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…

by Askar

கோவை மாவட்டம் வால்பாறையில் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இவர்களில் 30.000 பேர்கள் தணியார் தேயிலை மற்றும் காப்பித்தோட்டங்களில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றனர் இந்நிலையில் நேற்றைய தினம் வால்பாறை அருகே உள்ள பன்னிமேடு எஸ்டேட் பகுதியிலிருந்து கமலம் 58 என்ற பெண் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் முடீஸ் ஆரம்ப சுகாதார நிலையத்தின் பரிந்துரையின் பேரில் வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் கேரள மாநிலத்திற்கு சென்று வந்ததாக அவர் கொடுத்த தகவலின் பேரில் சந்தேகமடைந்த மருத்துவர்கள் பதட்டமடைந்து கொரோனா தொற்றாக இருக்குமோ என சந்தேகித்து கோவை அரசு மருத்துவமனைக்கு சம்பந்தப்பட்ட பெண்ணை அவசர கதியில் அனுப்பிவைத்தனர். இச்சம்பவத்தால் வால்பாறை பொதுமக்கள் பெரும் பீதியடைந்தனர் இந்நிலையில் நேற்று இரவு லோட்டஸ் தொலைக்காட்சியில் வெளியிட்ட செய்தி குறிப்பில் சந்தேகத்தின் பேரில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்த கமலம் என்பவருக்கு கொரோனா இல்லை அவருக்கு நிமோனியா என்று மருத்துவர்களின் முறையான தகவல்படி உறுதி செய்துள்ளதாக செய்தியின் படி வால்பாறை பகுதி மக்களிடையே ஏற்ப்பட்டிருந்த அச்சத்தை தவிர்க்க முடிந்ததால் தற்ப்போது பொதுமக்கள் பொதுமக்கள் இயல்பான நிலையில் இருந்து வருகின்றனர் மேலும் இதுபோன்ற தவறான தகவல்களால் தற்ப்போதுள்ள குரோனா பீதியை போக்க வால்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மையம் அமைத்தால் பொதுமக்களை பீதியிலிருந்து காக்க உதவியாக இருக்கும் ஆகவே வால்பாறை பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு உடனடியாக குரோனா பரிசோதனை மையம் அமைத்துத்தர தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வால்பாறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!