Home செய்திகள் பள்ளி படிப்பை கூட தாண்டாமல் பிரம்மிக்க வைக்கும் கண்டுபிடிப்பு- இந்தியா முழுக்க பிரபலமான ஏழை விவசாயி..

பள்ளி படிப்பை கூட தாண்டாமல் பிரம்மிக்க வைக்கும் கண்டுபிடிப்பு- இந்தியா முழுக்க பிரபலமான ஏழை விவசாயி..

by Askar

பள்ளி படிப்பை கூட தாண்டாமல் பிரம்மிக்க வைக்கும் கண்டுபிடிப்பு- இந்தியா முழுக்க பிரபலமான ஏழை விவசாயி..

ஆரம்ப பள்ளி படிப்பை கூட தாண்டாத ஏழை விவசாயி ஒருவரின் கண்டுபிடிப்பு பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கண்டுபிடிப்பிற்கு ஆர்டர்கள் குவிவதால் அவர் இந்தியா முழுக்க பிரபலமடைந்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள உன்ச்சா கானா என்ற சிறிய கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ் கர்மாலி. இவர் மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள பஜாஜ் ஆட்டோ ஷோரூம் ஒன்றில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். ஆனால் மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் அந்த வேலையை விட்டு விட்டு தனது சொந்த ஊருக்கு வந்து விட்டார். இதன்பின் தனது குடும்பத்திற்கு உதவும் நோக்கத்தில், விவசாய பணிகளை செய்ய தொடங்கினார். மிகவும் சாதாரண விவசாயிதான் என்றாலும் தற்போது மகேஷ் கர்மாலி இந்தியா முழுக்க வெகு வேகமாக பிரபலம் அடைந்து வருகிறார். ஏன் என தெரிந்தால் உங்களால் நிச்சயமாக மகேஷ் கர்மாலியை பாராட்டாமல் இருக்க முடியாது.

மகேஷ் கர்மாலி ஆரம்ப பள்ளி படிப்பை கூட தாண்டாதவர். ஆனால் தற்போது மிகவும் குறைவான செலவில் டிராக்டர் ஒன்றை மகேஷ் கர்மாலி உருவாக்கியுள்ளார். தனது நிலத்தை உழுவதற்காக இந்த டிராக்டரை மகேஷ் கர்மாலி உருவாக்கியுள்ளார். அதுவும் பழைய பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டரின் கழிவில் இருந்து இந்த டிராக்டர் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பழைய பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டரை தனது நண்பர் ஒருவரிடம் இருந்து 4,251 ரூபாய்க்கு மகேஷ் கர்மாலி வாங்கியுள்ளார். பின்னர் அதனை டிராக்டராக மாற்றியுள்ளார். பழைய ஸ்கூட்டரை டிராக்டராக மாற்ற மகேஷ் கர்மாலி ஒட்டுமொத்தமாக வெறும் 12 ஆயிரம் ரூபாயை மட்டுமே செலவிட்டுள்ளார். இந்த டிராக்டர் மூலம் 8,640 சதுர அடி நிலத்தை உழுவதற்கு வெறும் 2.5 லிட்டர் பெட்ரோல் இருந்தால் போதும். வழக்கமான டிராக்டருடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவான செலவு என மகேஷ் கர்மாலி கூறியுள்ளார்.

இதுகுறித்து மகேஷ் கர்மாலி கூறுகையில், ”நான் பஜாஜ் ஷோரூமில் 7 ஆண்டுகள் மெக்கானிக்காக பணியாற்றி வந்தேன். இந்த டிராக்டரை உருவாக்குவதற்கு அந்த அனுபவம் எனக்கு பெரிதும் கை கொடுத்தது. இந்த இயந்திரத்தை உருவாக்க எனக்கு மூன்று நாட்கள் தேவைப்பட்டது” என்றார். மகேஷ் கர்மாலி தனது கண்டுபிடிப்பிற்கு பவர் டில்லர் என பெயர் சூட்டியுள்ளார்.

தற்போதைய நிலையில் நிலத்தை உழ வேண்டும் என்றால், இந்த இயந்திரத்துடன் ஒருவர் நடந்து செல்ல வேண்டும். ஆனால் பவர் டில்லரின் அதிக சக்தி வாய்ந்த மற்றும் பெரிய வெர்ஷனை அடுத்த ஆண்டு கொண்டு வர வேண்டும் என மகேஷ் கர்மாலி திட்டமிட்டு வருகிறார். இதில், வழக்கமான டிராக்டரை போல் அமர்ந்து செல்ல முடியும். இதனிடையே தனது சக விவசாயிகளுக்கு மிகவும் குறைவான விலையில் விவசாய இயந்திரங்களை உருவாக்கி கொடுப்பதற்காக ஒர்க் ஷாப் ஒன்றை திறக்க வேண்டும் என மகேஷ் கர்மாலி விரும்புகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ”எனது நிலத்தை உழ தொடங்கியது முதல், இந்த பவர் டில்லருக்கு ஏராளமான ஆர்டர்கள் வந்து கொண்டே உள்ளன. ஆனால் இதுபோன்ற இயந்திரங்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்க வேண்டும் என்றால், டிரில்லிங், கட்டிங் மற்றும் வெல்டிங் உபகரணங்கள் தேவை. இதற்கு ஒட்டுமொத்தமாக 3-4 லட்சம் முதலீடு தேவைப்படும். தற்போது ஒர்க் ஷாப் தொடங்க பொருளாதார ரீதியிலான உதவிகளை எதிர்நோக்கியுள்ளேன். எனக்கு உதவி கிடைத்தால் என்னால் இந்த வாகனங்களை உருவாக்க முடியும்” என்றார். அனுபவமே சிறந்த ஆசான் என்பதை மகேஷ் கர்மாலி நிரூபித்து விட்டார். ஆரம்ப பள்ளி படிப்பை கூட தாண்டாத மகேஷ் கர்மாலியின் கண்டுபிடிப்பு தற்போது நாடு முழுக்க அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வெறும் ரூ.50 ஆயிரத்தில் விவசாயிகளுக்கு இந்த டிராக்டர் வரப்பிரசாதமாக கிடைத்துள்ளது. தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!