Home செய்திகள் தாரமங்கலத்தில் கொரானா வைரஸ் போன்ற ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர்.. 

தாரமங்கலத்தில் கொரானா வைரஸ் போன்ற ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர்.. 

by Askar

தாரமங்கலத்தில் கொரானா வைரஸ் போன்ற ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர்..

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு ஓவியர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமையில் கொரோனா ஓவியத்தை வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சமூக சேவையில் களமிறங்கிய ஓவியர்களை காவல்துறை, மருத்துவத்துறை, உள்ளாட்சித்துறை , வருவாய்த்துறையை சேர்ந்த வர்கள் பாராட்டினர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு 144 தடை உத்தரவு அறிவித்துள்ள நிலையில் இதன் முக்கிய அம்சமாக மக்கள் வீட்டை விட்டு தேவையில்லாமல் வெளியேறுவதை தடுக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் வருவாய் இன்றி தவித்து வரும் நிலையில் சேலம் மாவட்ட ஓவியர்கள் தங்களின் பங்களிப்பாக மக்கள் அதிகம் கூடும் சாலைகளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியம் மற்றும் வாசகங்களை எழுதி வருகின்றனர். அதன்படி தாரமங்கலம் பேருந்து நிலையம் அருகில் கொரோனா வைரஸ் ஓவியம் வரைந்து அதில் விழித்திரு, விலகியிரு, வீட்டிலிரு என்ற விழிப்புணர்வு வாசனங்களை எழுதியுள்ளார். இதற்கான ஏற்பாட்டினை தாரமங்கலம் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தராஜ் செய்திருந்தார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!