Home செய்திகள் அமெரிக்காவின் பிரபல நியூயார்க் டென்னிஸ் மைதானத்தில் கொரோனா மருத்துவமனை…

அமெரிக்காவின் பிரபல நியூயார்க் டென்னிஸ் மைதானத்தில் கொரோனா மருத்துவமனை…

by Askar

அமெரிக்காவின் பிரபல நியூயார்க் டென்னிஸ் மைதானத்தில் கொரோனா மருத்துவமனை…

அமெரிக்கா நாட்டின் நியூயார்க்கில் உள்ள பிரபல ஓபன் டென்னிஸ் மைதானம் கொரோனா சிகிச்சை மையமாக தற்காலிகமாக மாற்றப்படவுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸுக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், பிரபலமான யூ எஸ் ஓபன் டென்னிஸ் அரங்கை தற்காலிக மருத்துவமனையாக மாற்றம் செய்வதற்கு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

நியூயார்க்கில் உள்ள ஆர்த்துர் அஷே மைதானத்தில் தான் யூ எஸ் ஓபன் எனப்படும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

17,000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்ட இந்த மைதானம், உலக பிரசித்தி பெற்றது. தற்போது அங்கு கொரோனா வைரஸின் தாண்டவத்தால் மருத்துவ வசதிகளை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

அதன்படி விளையாட்டு ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சியமான யூ எஸ் ஓபன் டென்னிஸ் அரங்கை 150 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனையாக்க நடவடிக்கைகள் தீவிரமாக்கி உள்ளன.

இதனிடையே கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் முதன்மையான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை இந்த ஆண்டு ரத்து செய்ய ஆல் இங்கிலாந்து கிளப் முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அமைப்பு குழுவினர் புதன்கிழமை கூடி முடிவை அறிவிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!