Home செய்திகள் கொரானா பாதிப்பையொட்டி “மஸ்கட்டில்” விதிக்கப்பட்டிருந்த லாக்டவுன் நாளை (29/05/2020) முதல் நீக்கம்..!

கொரானா பாதிப்பையொட்டி “மஸ்கட்டில்” விதிக்கப்பட்டிருந்த லாக்டவுன் நாளை (29/05/2020) முதல் நீக்கம்..!

by Askar

கொரானா பாதிப்பையொட்டி மஸ்கட்டில் விதிக்கப்பட்டிருந்த லாக்டவுன் நாளை (29/05/2020) முதல் நீக்கம்..!

ஓமான் நாட்டின் அரசாங்கம் ஓமனின் தலைநகரான மஸ்கட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பையொட்டி ஏப்ரல் மாதத்திலிருந்து விதிக்கப்பட்டிருந்த லாக்டவுனை வரும் வெள்ளிக்கிழமை (மே 29,2020) முதல் தளர்த்துவதாக அறிவித்துள்ளது.

கொரோனாவின் பாதிப்பையொட்டி கடந்த ஏப்ரல் மாதம் 10 ம் தேதி முதல் மஸ்கட் பகுதியில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனாவை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஓமான் அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஈத் விடுமுறை முடிந்ததையடுத்து அனைத்து வளைகுடா நாடுகளும் கொரோனாவிற்கு தங்களுடைய நாட்டில் விதித்திருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றன. அதே போல், ஓமான் நாட்டிலும் கொரோனாவிற்கென விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய முடிவுகளின்படி, பொதுத்துறை ஊழியர்கள் அந்நாட்டில் படிப்படியாக பணிகளைத் தொடங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் மே 31, ஞாயிற்றுக்கிழமை முதல், 50 சதவீத பொதுத்துறை ஊழியர்கள் பணிக்கு திரும்புவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், தொற்றுநோய் பரவாமல் தங்கள் ஊழியர்களைப் பாதுகாக்கும் விதிகளை பொது மற்றும் தனியார் துறை விதிக்க வேண்டியதன் அவசியத்தை அந்நாட்டின் கொரோனாவிற்கான உச்சக் குழு அறிவுறுத்தியுள்ளது. பணிக்கு வரும் ஊழியர்களும் கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக முக கவசம், கையுறை மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!