Home செய்திகள் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது.!

வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது.!

by Askar

வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை அரசு தொடங்கி உள்ளது.!

NEWS ON AIRவெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இந்தியர்களின் பட்டியலை ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள இந்திய தூதரக அலுவலர்கள் தயாரித்து வருவதாகவும், இம்மாதம் 7-ஆம் தேதி முதல் படிப்படியாக இவர்கள் அழைத்து வரப்படுவார்கள் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கட்டணம் அடிப்படையில் வழக்கமான சேவை அல்லாத சிறப்பு விமான வசதி செய்து தரப்படும் என்றும் அந்த அமைச்சகம் கூறியுள்ளது. விமானத்தில் பயணிப்பதற்கு முன்பாக அனைத்து இந்தியர்களுக்கும் உடல் பரிசோதனை செய்யப்படும் என்றும், கோவிட்-19 நோய்த்தொற்று அறிகுறி இல்லாதவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயணத்தின் போது அனைவரும் சுகாதாரம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அரசு கூறியுள்ளது. இந்தியா திரும்பியவுடன் அனைவரும் ஆரோக்கிய சேது செயலியில் இணைக்கப்படுவார்கள். 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அரசு கூறியுள்ளது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!