Home செய்திகள் கொடைக்கானல் மேல்மலை கிராமத்தில் பூம்பாறை முருகன் கோவிலில் தேரோட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு..வீடியோ..

கொடைக்கானல் மேல்மலை கிராமத்தில் பூம்பாறை முருகன் கோவிலில் தேரோட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு..வீடியோ..

by ஆசிரியர்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற பூம்பாறை முருகன் கோவில் இத்திருக்கோயில் பழமையான பழனி அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் ஆகும் இத்திருக்கோயில் முருகன் சிலையானது 18 சித்தர்களில் ஒருவரான போகரால் பழனி மலைக்கோயிலில் வைக்கப்பட்ட நவபாஷாண சிலையின் மற்றொரு நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

அப்படிப்பட்ட முருகன் கோயில் ஆனது கொடைக்கானல் மேல்மலையில் உள்ள பூம்பாறை கிராமத்தில் அமைந்துள்ளது இத்திருக்கோயிலில் வருடா வருடம் தை மாதத்தில் 10 நாட்கள் திருவிழா நடக்கும் இத்திருவிழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள் திருவிழாவானது கடந்த 9 நாட்களுக்கு முன்பு கொடியேற்றம் நடைபெற்று தினமும் பல்வேறு வகையான பூஜைகள் மற்றும் மங்கள பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் இத்திருக்கோயிலின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது தேரோட்டத்தை தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வருவார்கள் அப்படி இழுத்து வரும் பொழுது அப்பகுதி பொதுமக்கள் வீடுகளுக்கு முன்பு தண்ணீர் தெளித்து கோலமிட்டு வைத்திருப்பார்கள் தேர் வரும் பொழுது தேர் வரும் வழியில் பூக்களை கூறுவதும் பேரின் மீது பூக்களைத் கூறுவதும் வாடிக்கையாக வைத்துள்ளனர் அப்படி தூங்குவதால் தங்கள் பகுதியில் மழை குறையாமல் வறட்சி ஏற்படாமல் இருக்கும் என நம்புகின்றனர்.

இது இத்திருக்கோயிலில் இன்று பக்தர்கள் பறவைக் காவடி பால் காவடி போன்ற காவடிகளும் எடுத்து முருகனின் அருள் பெற அரோகரா அரோகரா என்று கோஷம் இடமாறு பக்தர்கள் வீதிகளைச் சுற்றி கோயிலுக்கு வருகின்றனர் கோயிலைச் சுற்றி பக்தர்களால் வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்கு அன்னதானம் நீர் மோர் பந்தல் போன்றவைகள் அமைத்து வினியோகம் செய்யுது இருந்தனர்.

தேரோட்டத்தில் உள்ளூர் வெளியூரைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர் கொடைக்கானல் மேல்மலையை சேர்ந்த பூம்பாறை மன்னவனூர் கவுஞ்சி 10க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் மற்றும் கொடைக்கானல் தேனி உடுமலைப்பேட்டை திண்டுக்கல் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கீழை நியூஸுக்காக கொடைக்கானல் செய்தியாளர் கோடைரஜினி…

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!