கீழக்கரை முஸ்லிம் பஜாரில் திருட்டு – போலீஸ் விசாரனை..

கீழக்கரை கிரெளன் ஐஸ் கம்பெனி அருகில் உள்ள பெட்டிக் கடையின் ஓடுகளை பிரித்து திருட்டு நடந்துள்ளதாக தெரிகிறது. அங்கு 4 சிகிரெட் பண்டல்கள், 3000க்கு பத்து ரூபாய் சில்லரை காசுகளை திருடி சென்றதால், போலீஸார் விசாரித்து வருகின்றனர். கீழக்கரையில் சமீப காலமாக, வள்ளல் சீதக்காதி சாலையில் இருக்கும் பெட்டிக்கடைகளில் தொடர்ந்து இது போன்ற திருட்டு நடைபெற்று வருவது சிறு வியாபாரிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

மேலும் 27-01-2017 நள்ளிரவில் மட்டும் ஒரே பகுதியில் 3 திருட்டு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திருட்டு சம்பவத்தை கீழக்கரை காவல்துறை ஆய்வாளர். புவனேஸ்வரி நேரடியாக விசாரித்து வருகிறார். இந்த திருட்டு சம்பவங்களை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் சிறு வியாபாரிகள் நிம்மதி அடைவார்கள்.