இலக்கை தாண்டி சாதனை படைக்கும் கீழக்கரை மதுக்கடைகள்.. சமூக ஆர்வலர்களும், சட்ட போராளிகளும் எங்கே?? சமூக ஆர்வலரின் ஆதங்கம்..

கீழக்கரை ஊருக்குள் இரண்டு மதுபானக்கடைகள். மதுப்பிரியர்களின் ஆதரவால் நிர்ணய எல்லையை தாண்டி வியாபாரம் அமோகமாக நடந்து வருகிறார்கள்.  கீழக்கரையில் ஏழை குடிமகன், குடிகார மகனாக வீதியில் கிடக்கும் அவலம்.  பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை இந்த சாராயக்கடைகளால் தினம் தினம் சீரழிந்து வரும் கோரம்.

தமிழக அரசின் ஆணைப் படி நகர் பகுதிகளில் உள்ள மதுபாணக்கடையை அப்புறப்படுத்தி ஊருக்கு ஒதுக்குப்புறங்களிலில் கொண்டு செல்ல வேண்டும் என்ற விதி இருந்தும், பல அமைப்புகள் போராட்டம் நடத்தியும், சட்ட ரீதியாக மனுக்களை தொடர்ந்தும் எந்த ஒரு விடிவும் பிறக்கவில்லை.

மேலும் மதுக்கடைக்கு எதிரலேயே அரசு மருத்துவமனை அமைந்திருப்பதால் அங்கு வரும்  பொதுமக்கள், அப்பகுதியில் மது அருந்தி விட்டு அலோங்கலமாக கிடக்கும் குடிமகனை பார்த்து முகம் சுழித்த வண்ணம் செல்கிறார்கள்.

இதுபற்றி சமூக ஆர்வலர் அப்ரோஸ் கூறுகையில், “கீழக்கரையில் மதுபாணக்கடை மது விற்பனை இலக்கை தாண்டி அமோக விற்பனை நடைபெறுகிறது. பல இளைஞர்கள் பல பள்ளி மாணவர்கள் போதையில் திண்டாடி வருகிறார்கள். அந்த பகுதிகளிலில் பாதசாரிகள் தாய்மார்கள் நடந்து செல்ல அச்சப்படுகிறார்கள். ஆகவேகீழக்கரை சமூக ஆர்வலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சட்டப்படி மதுக்கடை யை அகற்ற போராட வேண்டும்.” என்றார்.