58
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள மாயாகுளத்தில் உள்ள சேர்மத்தாய் வாசன் நடுநிலைப்பள்ளியில் ரோட்டரி சங்கம் சார்பாக மரம் நடும் விழா மற்றும் மாணவர்களுக்கு கைகழுவும் முறை பற்றி விழிப்புணர்வு முகாம் மற்றும் நோய்கள் பரவாமல் தடுப்பது பற்றிய முகாம் நடைபெற்றது.
இம்முகாமை ரோட்டரி சங்க பட்டயத்தலைவர் அலாவுதீன் துவக்கிவைத்தார். முகாமிற்கு வருகை தந்த அனைவரையும் பள்ளி தலைமையாசிரியர் சுகிபாலின் வரவேற்றார். இந்நிகழ்வில் கீழக்கரை ரோட்டரி சங்கத்தலைவர் சுந்தரம், செயலாளர் ஹசன், பொருளாளர் முனியசங்கர்,மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் ராசீக்தீன் மற்றும் பல நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.