கீழக்கரையிர் சமீப காலமாக வெளிமாநிலத்தவர்கள் அதிகமாக யாசகம் கேட்பது போலவும், தொண்டு நிறுவனங்கள் சார்பாக வசூல் செய்வதாகவும் கூறிக்கொண்டு ஆண்கள் இல்லாத பெண்களை அணுகி பணம் வசூல் செய்வதாக அறியப்படுகிறது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கீழக்கரை கிழக்குத் தெரு பகுதியில் சந்கேத்திற்கிடமாக நடமாடிய பெண்ணை விசாரித்த பொழுது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். பின்னர் காவல்துறையினர் வந்து விசாரித்த பொழுது சமீபத்தில் கீழக்கரை தாசீம் பீவி கல்லூரி பகுதியில் பிடிப்பட்ட கூட்டத்தாருடன் தொடர்பு உள்ள பெண்ணாக இருக்கலாம் என்று தொிவித்துள்ளார்கள்.
ஆனால் இச்சம்பவத்தை சாதராணமான திருட்டு சம்பவம் போல் விட்டு விடாமல் காவல் துறையினர் வெளிமாநில ஊடுருவலை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். பொதுவாக கீழக்கரை போன்ற ஊர்களில் அதிகமான ஆண்கள் வெளிநாட்டில் வசிப்பதாக இருப்பதால் இதை ஒரு சந்தர்ப்பாக பொிய திருட்டு சம்பவங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஆகையால் வீடுகளில் தனியாக வசிக்கம் பெண்கள் அறிமுகம் இல்லாத ஆண்களோ, பெண்களோ எந்த காரணத்திற்கான அணுகினாலும் உடனடியாக வீட்டிற்குள் அழைக்காமல் கவனமாக இருப்பது நலம்.
You must be logged in to post a comment.