கம்ப்யூட்டர் உண்டு.. பாஸ்வேர்டு இல்லை .. அவதியோ பொதுமக்களுக்கு…கீழக்கரையின் அவலம்..

கீழக்கரை மக்கள் மட்டுமின்றி, அதைச் சுற்றியுள்ள சுற்றியுள்ள கிராம பகுதியை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் பிறப்பிட சான்றிதழ் (Nativity), வருமான சான்றிதழ் (Income),சாதி சான்றிதழ் ( Community ), கல்வி உதவித் தொகை, மற்றும் படிப்பு சம்பந்தமான தேவைளுக்கு கீழக்கரை தாலுகாவை நம்பியே உள்ளனர்.

இதில் சாதி சான்றிதழ் மாற வாய்ப்பில்லை, ஆனால், வருமானம், மற்றும் பிறப்பிட சான்றிதழ் ஒரு வருட காலம் மட்டுமே செல்லுபடியாகும் காரணத்தால்  வருடா வருடாவருடம் புதுப்பிக்க வேண்டிய கட்டாயம். இதற்கு  Net centerகளில் மனு செய்து பெறலாம் என்றாலும், கிடைப்பதற்கு வாரங்கள் ஆகலாம்.

இந்நிலையில் கீழக்கரை குரூப் VAOவாக ஆதிலெட்சுமி என்பவரும், காஞ்சிரங்குடி குரூப் VAOவாக பன்னீர் என்பவரும் பணி இட மாறுதல் பெற்று இங்கு வந்துள்ளனர். ஆனால் கம்யூட்டரில் வரும் சான்றிதழ்களை சரிபார்க்க உபயோகிக்கும் பாஸ்வேர்ட் இன்னும் தரப்படவில்லை, ஆகையால் அனைத்து சான்றிதழ் வழங்கும் பணிகளும் தாமதம். நம் அரசாங்கத்திற்கும், அதன் கீழ் உள்ள அரசாங்க அதிகாரிகளுக்கும் தொலை நோக்கு பார்வையில் சிந்திக்க வேண்டும் என்ற எண்ணமே கிடையாது என்பதை ஒவ்வொரு தருணத்திலும் நிருபித்து வருகிறார்கள்.

தகவல்: மக்கள் டீம்.